கடந்த ஞாயிறு 14.8.2011 திகதிய ‘சண்டே லீடர்’ பத்திரிகையில் ‘மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களுக்கு மரியாதையுடன் கூறும் ஆலோசனைகள்’ என்ற தலைப்பில் தன்னுடைய கௌரவத்திற்கும், நற்பெயருக்கும் தீங்கு விளைவிக்கும் நோக்குடன் எந்தவித அடிப்படை உண்மைகளுமற்ற அவதூறுகளை உள்ளடக்கிய ரட்ணஜீவன் கூல் என்பவருடைய கட்டுரையொன்றை பிரசுரித்தமைக்கு மானநட்ட ஈடாகவே மேற்படி 50 மில்லியன் ரூபாவை ‘சண்டே லீடர்’ பத்திரிகை ஆசிரியரிடமும் அதன் வெளியீட்டாளர்களிடமும் சட்டத்தரணி ரெங்கன் கோரியுள்ளார். இதுபற்றி சட்டத்தரணி ரெங்கன் கருத்துத் தெரிவிக்கையில், லண்டனிலுள்ள தாரின் கொன்ரஸ்ரைன் என்னும் வியாபாரி ஒருவர் தெரிவித்ததாக எனக்கு எதிராக ஆதாரமற்ற அவதூறுகளை பேராசிரியர் கூல் தனது கட்டுரையில் எழுதியுள்ளார். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் இந்த அவதூறுப் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பேராசிரியர் கூலுக்கும், வியாபாரி கொன்ஸ்;ரன்ரைன் ஆசிரியர்களுள் ஒருவராகவுள்ள லண்டன் இணையத்தளப் பத்திரிகை ஆசிரியர் குழுவிற்கும் சட்ட நடவடிக்கைக்கு முன்னரான அறிவித்தல்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. ஒரு வார காலத்திற்குள் அவர்கள் எனது கோரிக்கைக்கு இணங்காவிடில் அவர்களுக்கு எதிராகவும் மான நஸ்ட வழக்கு தொடரப்படும் எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக