திங்கள், 4 ஜூலை, 2011

Telengana.10 அமைச்சர்கள், 61 எம்.எல்.ஏக்கள், 10 எம்.எல்.சிக்கள் ராஜினாமா

ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், அமைச்சர்கள் சொன்னபடி தங்களது பதிவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல தெலுங்கு தேசம், போட்டி தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. சமீப காலமாக இது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தனி மாநிலம் அமைப்பது தொர்பாக பரிசீலிப்பதாக கூறியது மத்திய அரசு. ஆனால் வழக்கம் போல பல்வேறு ஜெகஜால குழப்பத்தை ஏற்படுத்தி அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

இதனால் வெகுண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மீண்டும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்எல்சிக்கள் பதவி விலக வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய கட்சி காங்கிரஸை நெருக்கி வருகிறது. தெலுங்கானா மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து ஆந்திர மாநில அமைச்சர் ஜனா ரெட்டி தலைமையில் தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளு்மன்ற, மேலவை உறுப்பினர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். அதில் ராஜினாமா செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏக்கள், 9 எம்.பிக்கள், 16 எம்எல்சிக்கள் இன்று ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் கிரண் குமார் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் கட்சி அரசுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

இவர்கள் விலகினால், பெரும்பான்மைக்குத் தேவையான 148 பேர் என்ற நிலையிலிருந்து சிறுபான்மை அரசாக ஆந்திர அரசு மாறி விடும் என்பதால் காங்கிரஸ் தலைமை கடும்க வலையில் மூழ்கியுள்ளது.

முந்திக் கொண்ட தெலுங்கு தேசம்

இந்த நிலையில் காங்கிரஸாருக்கு முன்பாக நேற்று அதிருப்தி தெலுங்குதேசத்தைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து அனைவரையும் அதிர வைத்தனர்.

இவர்கள் நகம் ஜனார்த்தன் ரெட்டி குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் தவிர ஜோகு ராமண்ணா, ஹரீஸ்வர் ரெட்டி, வேணுகோபாலச்சாரி ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் மூலம் தெலுங்கானா பகுதி மக்களிடையே இவர்கள் திடீர் ஹீரோக்களாகியுள்ளனர்.

சொன்னபடி விலகினர் காங்கிரஸார்

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ஜனா ரெட்டி வீட்டில் கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

முதல் கட்டமாக தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 10 அமைச்சர்கள், 26 எம்.எல்.ஏக்கள், 10 எம்.எல்.சிக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சட்டசபைத் தலைவர், பேரவைத் தலைவருக்கு அனுப்பி வைத்தனர்.

31 தெலுங்கு தேசம் எம்.எல்.ஏக்களும் விலகினர்

அதேபோல தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த தெலுங்கானாவைச் சேர்ந்த 31 எம்.எல்.ஏக்களும் இன்று பதவி விலகினர்.

நேற்று முதல் இன்று வரை மொத்தம் 10 அமைச்சர்கள், 10 எம்.எல்.சிக்கள், 61 எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் ஆந்திர அரசியல் பெரும் சூடு பிடித்துள்ளது.
 

English summary
Four rebels TDP MLAs on Sunday sprang a surprise on the entire Telangana Congress pantheon that is in Delhi to make a grand show of their resignations in support of separate statehood. A day before they are to hand their letters to the presiding officers of Parliament and the state legislature, a little group led by Nagam Janardhan Reddy shot off their papers to the Assembly speaker’s office. Congress legislators will submit their resignations today.

கருத்துகள் இல்லை: