குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷாயூர் பகுதியில் தனியார் மகளிர் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வருபவள் சுவேதா (6) இவர் வீட்டுப் பாடம் முடிக்காததால் ஆசிரியை விஜயா (பெயர் மாற்றம்) கடும் ஆத்திரம் அடைந்தார்.
சுவேதாவை நிர்வாணமாக்கி பள்ளியில் ஊர்வலமாக வரச்செய்தார். பின்னர் அவளை அங்குள்ள கழிவறைக்குள் அடைத்து வைத்து சுத்தம் செய்யுமாறு கூறினார். இதனால் சுவேதா கதறி அழுதார்.
பின்னர் விஜயா அவளிடம் இங்கு நடந்ததை பெற்றோரிடம் கூறினால் பள்ளியை விட்டு நீக்கி விடுவேன் என்று மிரட்டினார்.
இதனால் அவர் பெற்றோரிடம் கூறவில்லை. ஆனால் அவளது தோழிகள் அவளது பெற்றோரிடம் ஆசிரியை நிர்வாண ஊர்வலம் நடத்தியது பற்றி கூறி விட்டனர்.
இதையறிந்ததும் சுவேதாவின் பெற்றோர் பள்ளியில் வந்து தட்டி கேட்டனர்.
இதையறிந்த மற்ற பெற்றோர்களும் பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆசிரியை விஜயா கைது செய்யப்பட்டார்.
மாவட்ட கல்வி அதிகாரி நடத்திய விசாரணையில் அப்பள்ளி அரசு அங்கீகாரம் பெறாமல் 19 ஆண்டுகள் இயங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அப்பள்ளியின் அறங்காவலர்களிடம் கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக