புதன், 6 ஜூலை, 2011

"தொப்புள் கொடி" எந்த படமும் சரியாக போகவில்லை என்றவுடன் தொப்புள் கொடி உறவுகளே, தம்பிகளே

தமிழர்கள் சாகும்போதேல்லாம் திரைப்படத்தில் பிசியாக இருந்துவிட்டு இப்போது எந்த படமும் சரியாக போகவில்லை என்றவுடன்   தொப்புள் கொடி உறவுகளே, தம்பிகளே என்று கூச்சலிட்டாள் அங்கே எல்லாம் சரியாகிவிடுமா?.  அங்கே அவன் அப்பா, அம்மாவ இழந்து உறவினர்களை இழந்து துக்கத்தில் இருக்கும்போது உனக்கு என்னடா இங்கே "மகிழ்ச்சி" கேட்க்குது?.  உனக்கு படம் சரியாக போகவில்லை என்றால் ஈழத்தமிழர்களை பற்றி மேடையில் வாய்கிழிய பேசுவது பொழுது போக்காக போய் விட்டதா?

என்  ஆத்தாவுக்கு புது செருப்பு வாங்கி கொடுக்க காசு இல்ல ஆனால் அம்பானி மகன் தன் மனைவிக்கு வானூர்த்தி பரிசு கொடுக்கிறார் என்று "இந்தியா வல்லரசு ஆகுமா"    தலைப்பில்  நீ பேசியதை   பார்த்தேன்.  ஏன் இதே கேள்வியை ஒரு நடிகனையோ அல்லது  திரைப்பட தயாரிப்பாலனையோ  பார்த்து கேட்க்க வேண்டியது தானே?.  உன் போலி தமிழ் உணர்வையும், அரசியல் நோக்கத்தையும்  விரைவில் மக்களுக்கு தோலுரித்து  காட்டுவேன்.  உன் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவை தயார்படுத்தி வருகிறேன்(கருமம் நீ பிறந்து வளந்த இடத்த பத்திலாம் படிக்க வேண்டி இருக்கு), விரைவில் உனது போலி முகம் அந்த பதிவில் தெரியத்தான் போகுது. 

நீ முதல்ல சினிமா துறையில் இருக்கும் அக்கிரமங்களையும், அராஜகங்களையும் எதிர்த்து குரல் கொடு. சினிமாவில் இருக்கும் ஆபாசத்தை எதிர்த்து குரல் கொடு, சினிமாவில் காட்டும் வன்முறையை எதித்து குரல் கொடு பிறகு அடுத்தவன பத்தி பக்கம் பக்கமா கிழிக்கலாம்.
 
உன்னுடைய "வாழ்த்துக்கள்" படம் சரியாக ஓடவில்லை என்றவுடன் படம்பார்த்தவர்கள் சினிமா டிக்கெட்டுடன் கேள்விக்கு சரியான பதில் அனுப்பினால் பரிசு என்று நூதன கொள்ளை  முறையில் படத்தை ஓட்ட நினைத்தவன்தானே  நீ.  உன்னை பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டி   உன் போலி அரசியல் வாழ்க்கைக்கு  முடிவுக்கட்டும் பதிவை  எதிர்ப்பார்த்து காத்திரு. என் இந்தியாவை பார்த்து குறைசொல்ல நீ தகுதியானவனா என்று அந்த பதிவு உனக்கு உணர்த்தும்.
ந்தியாவை  குறை சொல்லும்  நாய்களா,  என் இந்தியாவா உன்னை இந்த தப்பெல்லாம் செய்ய சொன்னது?  எந்த இந்திய சட்டத்தில் எழுதி உள்ளது அமைதி படை அனுப்பினால் அங்கே உள்ள பெண்களை கற்பழிக்க வேண்டும், வீரப்பனை தேட அனுப்பினால் பெண்களை மானபங்கம் படுத்த வேண்டும் என்று?  என் தாய்நாடு கொடுத்த சுதந்திரத்தையும், அதிகாரத்தையும் தவறாக பயன்படுத்தி இன்று ஊழல் ஊழல் என்று எதில் எடுத்தாலும் ஊழலை வளர்த்து விட்டது யார் குற்றம்?  இந்தியா என்பது ஒரு தனி நபரல்ல எதிர்த்து குரல் கொடுக்க, நம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்கும்  புனிதமான உணர்வு. அந்த உணர்வை எவன் ஒருவன் இழக்கிறானோ அன்றே அவன் இந்தியன் என்ற தகுதியை இழக்கிறான்.  தயவு செய்து அந்த உணர்வை அழிக்கும் வகையில்  இளைஞர்கள் மனதில் நச்சை கலக்க வேண்டாம் இந்தியாவிற்கு எதிராக.
thoppithoppi.blogspot.com

கருத்துகள் இல்லை: