எதிர்வரும் வாரங்களில் இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகருக்கும் தமிழக முதலமைச்சருக்கும் இடையில் சந்திப்பு ஒன்று நடைபெறவுள்ளதாக நம்பத்தகு தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்திய பிரதமர் மன்மோகன் சிங் தமிழக முதலமைச்சர் பாரிய ஒத்துழைப்பு வழங்குவதாகவும், அவர் சட்டசபையில் நிறைவேற்றிய தீர்மானங்கள் நாட்டுக்கிடையே ஆன உறவு மேலான்மையை கருத்திற் கொண்டு சிக்கல்கள் காணப்பட்டாலும் மிகுந்த அவதானத்துடன் நிறைவேற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழக முதலமைச்சராக ஜெயலலிதா தெரிவு செய்யப்பட்டதும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தமிழக முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்து அவருடன் இணைந்து நாட்டிற்கு இடையிலான உறவினை மேம்படுத்த விரும்புவதாகவும் கடிதம் எழுதியிருந்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக