சனி, 9 ஜூலை, 2011
6,000 ராணுவ வீரர்கள் ஆந்திரா விரைந்தனர் ஜெய்ப்பால் ரெட்டி பிரதமருடன் சந்திப்பு
ஆந்திராவை பிரித்து தனி தெலங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி, அப்பகுதியை சேர்ந்த மாநில அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இந்நிலையில் ஆந்திர மூத்த காங்கிரஸ் தலைவரும் பெட்ரோலியத் துறை அமைச்சருமான ஜெய்ப்பால் ரெட்டி, டெல்லியில் நேற்று பிரதமர் மன்மோகனை சந்தித்து 40 நிமிடங்கள் பேசினார்.
அப்போது ஆந்திராவில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், ஐதராபாத் மற்றும் தெலங்கானா பகுதியில் உள்ள 9 மாவட்டங்களில் மக்களின் மனநிலை, அவர்களுடைய சென்டிமென்ட் போன்ற விவரங்களை விரிவாக எடுத்துரைத்து, தனி தெலங்கானா மாநிலம் அமைக்க கோரியதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.
தெலங்கானா பகுதியில் உள்ள செல்வெலா நாடாளுமன்ற மக்களவை தொகுதி எம்.பி.யாக ஜெய்ப்பால் பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில், தெலங்கானா தொடர்பாக ஆந்திராவில் போராட்டம் வலுத்துள்ளதால், கூடுதல் பாதுகாப்புக்கு துணை ராணுவ வீரர்கள் 6 ஆயிரம் பேரை மத்திய அரசு அனுப்பி உள்ளது. மாநிலத்தில் ஏற்கனவே உள்ள 4 ஆயிரம் சி.ஆர்.பி.எப் வீரர்களுடன் இவர்கள் கூடுதலாக ரோந்து பணியில் ஈடுபடுவார்கள்.
ஆந்திரா தெலுங்கனா பிரிவினை போராட்டம் பெரும் கலவரமாக வெடிக்கப்போகிறது. இந்தியா சந்திக்கபோகும் மிகபெரும் பிரச்சனையாக இது இருக்கபோகிறது. நீண்ட காலமாக தீர்க்கப்படாமல் இருந்த பல்வேறு சமுக பிரச்சனைகளின் காரணமாக இது பிரிவினை வடிவமெடுத்து இருக்கிறது.
ராணுவ ஆட்சி விரைவில் வரும் சாத்தியக்கூறுகள் காணப்படுகிறது. ஆந்த்ராவில் ராணுவ ஆட்சி என்றதும் என்னவோ எதோ என்று எண்ணி விடாதீர்கள்? அனேகமாக காஷ்மீரில் நடப்பது போன்ற ஒரு நிலைமையை தான் நாம் ராணுவ ஆட்சி என்று குறிப்பிட்டோம்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக