திங்கள், 4 ஜூலை, 2011

ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் பயண கட்டணங்கள் குறைப்பு

கொழும்பிலிருந்து பல பாகங்களுக்கு செல்லும் விமான சேவை கட்டணங்களில் போட்டித்தன்மையுடன் கூடிய நெகிழ்வான குறைப்பினை ஏற்படுத்தியுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி மாணவர் விசாவில் இலண்டன், கோலாலம்பூர் மற்றும் பங்களூருக்கு ஒருவழிப் பாதை விமானச்சீட்டுக்கு விசேட கட்டணமும், மத்திய கிழக்கு நாடுகளான டோகா, டுபாய் மற்றும் சவுதி அரேபிய நாடுகளுக்கு பணிக்காக செல்பவர்களுக்கு விசேட கட்டணமும், யாத்திரிகளாக இந்தியா, ஜித்தா மற்றும் தாய்லாந்துக்கு செல்பவர்களுக்கு விசேட கட்டணமும் அறவிடப்படும் எனத் தெரிவிக்ப்பட்டுள்ளது.

இதன்படி இவர்களுக்கு 15 தொடக்கம் 20 சதவீதம் வரை கழிவு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

கருத்துகள் இல்லை: