திங்கள், 4 ஜூலை, 2011

விரிவுரையாளர் கைது!போலியான சான்றிதழ்களைச் சமர்ப்பித்து பணியாற்றிய பல்கலைக்கழக

இரத்மலானை கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தில் போலியான பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து விரிவுரை யாளராக கடமையாற்றிய ஒருவரை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்றைய தினம் மொறட்டுவ நீதிமன் றத்தில் ஆஜர்படுத்திய போதே தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்திய, இந்திராகாந்தி பல்கலைக்கழகம், பிரித்தானியா மற்றும் அமெரிக்கா ஆகிய பல்கலைக்கங்களின் போலிப் பட்டப்படிப்பு சான்றிதழ்களை சமர்ப்பித்து குறித்த பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராக இவர் கடமையாற்றியுள்ளார்.
குறித்த பல்கலைக்கழக பட்டபடிப்பு சான்றிதழ்களை பல்கலைக்கழக நிர்வாகத்தினர் ஆய்வு செய்தபோது அவை போலியானவை எனக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
போலியானவை எனக் கண்டு பிடிக்கப்பட்ட பட்டபடிப்பு சான்றிழதழ்களை சர்வதேச பொலிஸாரிடம் மேலதிக விசாரணைகளுக்காக அனுப்பி வைத்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.இந்நிலையிலே சந்தேக நபரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: