சுமார் 25 கொலைகளுடன் தொடர்புபட்ட பாதள உலக குழுத் தலைவர்களில் ஒருவரான நெலுவ பிரியந்த நேற்றிரவு சூரியவெவ பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படை பிரிவினரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட நெலுவ பிரியந்த, விசாரணைகளை அடுத்து ஆயுதம் பதுக்கி வைக்கப்பட்டதாக அவர் கூறிய இடமான சூரியகந்த மோர்னிங்கந்த என்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அங்கு சென்ற போது அங்கு மறைத்து வைக்கப்பட்ட ஆயுதம் ஒன்றினால் விசேட அதிரடிப் படையினரை சுடுவதற்கு அவர் முயன்றுள்ளார்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய சூட்டுச் சம்பவத்தில் காயமுற்ற அவர், சூரியவெவ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
நெலுவ பிரியந்த பல கொலை வழக்குகளுடன், போதை பொருட் கடத்தல்களுடன் சம்பத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் மாகாண சபை கொலை வழக்குடன் இவர் சம்பந்தப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக