டோமினிக் கார்டேஸ் என்ற இந்த நர்சின் வில்லேஸ் ஆவ் டெர்ட்ரே நகர் அருகே உள்ள லில்லே கிராமப்புற வீட்டிலிருந்து 6 சிசுக்களின் உடல் பாகங்கள் மீட்கப்பட்டுள்ளன.
மிக உடல் பருமன் கொண்ட இந்த 40 வயதுப் பெண்ணுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்கள் 20 வயதுக்கு மேலானவர்கள்.
முதல் முறையாக இவருக்கு பிரசவம் நடந்தபோது உடல் பருமன் காரணமாக பெரும் வலியையும் வேதனையையும் இவர் அனுபவித்தாராம். இந்த வேதனையால் மனரீதியில் பாதிக்கப்பட்ட அவர் தனக்கு அடுத்துப் பிறந்த 8 குழந்தைகளையும் கொலை செய்து வீட்டு வளாகத்திலேயே புதைத்துள்ளார்.
இந்த வீட்டை சமீபத்தில் இந்தத் தம்பதி விற்றது. இதையடுத்து புதிதாக வாங்கியவர்கள் வீட்டு வளாகத்தில் செடிகளை நட தோண்டியபோது இரு குழந்தைகளின் எலும்புக் கூடுகள் சிக்கின. இதையடுத்து அவர்கள் போலீசில் புகார் தந்தனர்.
இதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் டோனிமிக் கார்டேஸ் அடுத்தடுத்து 8 குழந்தைகளை கழுததை நெரித்துக் கொலை செய்து புதைத்தது தெரியவந்தது.
இதில் 6 குழந்தைகளின் உடல்கள் இந்தத் தம்பதி இப்போது வசிக்கும் சென்டியர் டி ப்ரூ வீட்டு வளாகத்தி்ல் மீட்கப்பட்டன. இந்த உடல்களை பிளாஸ்டிக் பைகளில் கட்டி வீட்டின் தரைப்பகுதி கிட்டங்கியில் போட்டு வைத்திருந்தார் கார்டேஸ். இந்த உடல்களும் எலும்புக் கூடுகளாகிவிடடன.
இந்தக் கொலைகளுக்கும் தனது கணவருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று போலீசாரிடம் கார்டேஸ் தெரிவித்துள்ளார். மேலும் தான் கர்ப்பமானது கூட அவருக்குத் தெரியாது, குழந்தைகள் பிறந்ததும் தெரியாது என்று அவர் கூறியுள்ளார். இதையடுத்து கணவர் மட்டும் விடுவிக்கப்பட்டுள்ளார். கார்டேஸ் தொடர்ந்து சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிகிறது.
ஒரு நர்ஸ் என்ற வகையில் கருத்தரிக்காமல் இருக்கவாவது முயன்றிருக்கலாமே என்று போலீசார் கேட்டதற்கு, இதற்காக நான் டாக்டரைப் பார்க்க விரும்பவில்லை என்று கார்டேஸ் பதிலளித்துள்ளார்.
பதிவு செய்தது: 30 Jul 2010 11:49 pm
பிரான்சில் பச்சிளங்குழந்தை கடத்தல் அதிகமாக காணபடுகின்றது ஒருவேளை இந்த பெண்ணுக்கு பிறந்த குழந்தைகளாக இருக்காது கடத்தி வந்து கொலை செய்ய பட்டிருக்கலாம் காரணம் தான் கருவுற்றதும் குழந்தைகள் பிறந்ததும் கணவருக்கு தெரியாது என்று கூறுவது சந்தேகம் அளிக்க கூடியதாக இருக்கின்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக