ராம்ஜெத்மலானி பேச்சு : தொடர்ந்து ராஜ்யசபாவில் உறுப்பினர்கள் விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து கோஷங்கள் எழுப்பினர். இதனையடுத்து சபாநாயகர் அமீது அன்சாரி சபையை 12 மணி வரை ஒத்தி வைத்தார். தொடர்ந்து 12 மணிக்கு துவங்கியதும் அமீத்ஷா விவகாரத்தில் சி,பி.ஐ., தவறுதலாக பயன்படுத்தப்பட்டுள்ளது என பா.ஜ., தரப்பில் ராம்ஜெத்மலானி பேசினார். பாதுகாப்பு கவுனசிலுக்கு தெரியும் முன்னதாக குற்றப்பத்திரிகை பத்ரிகைகளுக்கு லீக் ஆகியுள்ளது. இந்த நகல் அமீத்ஷா வக்கீலுக்கு வழஙக்ப்படவில்லை என்றார். தொடர்ந்து கூச்சல் குழப்பம் நிலவியதால் ராஜ்யசபா மீண்டும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
லோக்சபாவில் கூச்சல் : இது போல் லோக்சபாவில் எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் விலைவாசி உயர்வு பிரச்னை குறித்து விவாதிக்க ஒத்தி வைப்பு தீர்மானம் கொண்டு வர வேண்டும் என்றார். ஆனால் சபாநாயகர் மீரகுமார் அனுமதிக்க மறுத்து விட்டார். இதனையடுத்து பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. தொடர்ந்து சபையை ஒத்தி வைப்பதாக மீராகுமார் அறிவித்தார். தொடர்ந்து 12 மணிக்கு துவங்கியது. அப்போதும் எதிர்கட்சிகள் எதிர்ப்பு கிளப்பியதால் மீண்டும் சபையை 2 மணி வரை ஒத்திவைத்தார். 2 மணிக்கும் அமளி குறைந்தபாடில்லை. இதனால் லோக்சபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.
பார்லிமென்டின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று முறைப்படி துவங்கியது. முதல்நாளான நேற்று ( திங்கட்கிழை) , முன்னாள் துணை ஜனாதிபதி பைரோன்சிங் ஷெகாவத் மற்றும் தற்போதைய சபையில் எம்.பி.,யாக இருந்த, முன்னாள் அமைச்சர் திக்விஜய்சிங் ஆகியோரின் மறைவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோல மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பலியான சம்பவம், மங்களூர் ஏர்-இந்தியா விமான விபத்து மற்றும் சமீபத்திய ரயில் விபத்துகளில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. தவிர பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் நாள் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
ஒத்திவைப்பு தீர்மானத்தை கொண்டு வருவதற்கான நோட்டீசை பா.ஜ., உள்ளிட்ட ஒவ்வொரு எதிர்க்கட்சியுமே சபாநாயகர் மீரா குமாரிடம் அளித்துள்ளன.
மற்ற எந்த அலுவல்களையும் இப்போதைக்கு எடுத்துக் கொள்ள வேண்டாம், எல்லாவற்றையும் ஒத்திவைத்துவிட்டு முதல் வேலையாக விலைவாசி பிரச்னையை எடுத்துக் கொள்ள வேண்டும் என, அந்த நோட்டீசில் வலியுறுத்தப்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உட்பட மற்ற எதிர்க்கட்சித் தலைவர்கள், லாலு, முலாயம்சிங், மாயாவதி ஆகியோரும் ஒத்திவைப்பு தீர்மானத்தில் பிடிவாதமாக உள்ளனர்.
தமிழ் - chennai,இந்தியா
2010-07-27 14:51:29 IST
இதில் நம் தமிழ் நாட்டை சேர்ந்த மீனவருக்கு இரங்கல் செய்தி வாசிக்கவில்லை .... விரைவில் நம் தமிழ் நாடு சுடுகாடான்னாலும் ... எவனும் கவலை பட மாட்டான் ......
அசோக் - Karur,இந்தியா
2010-07-27 14:42:22 IST
சபாஷ்!!! M P கள் அனைவரும் வாங்கும் சம்பளத்திற்கு நல்ல வேலை!!!!!...
gudalkumar - theni,இந்தியா
2010-07-27 13:36:59 IST
ippva aramichattanghala...
அஹ்மத் - riyadh,இந்தியா
2010-07-27 13:30:14 IST
பா.ஜ, அமீத்ஷா பிரச்சனைய திசை திருப்பவே இப்படி அமளியில் ஈடுபட்டு அலுவலுக பணி நடக்காமல் மக்கள் பணத்தை வீண் விரயம் செய்கிறார்கள்.இவர்களையும் மக்களையும் திருத்தவே முடியாது....
Vaithianathan - Muscat,பாகிஸ்தான்
2010-07-27 12:56:11 IST
விலைவாசி உயர்வு பிரச்சினையில் உறுப்பினர்கள் மிகவும் தீவிரமாக போராடவேண்டும். பின்வாங்கக்கூடாது. மீறினால் எதிர்கட்சிகள் மக்கள் நம்பிக்கையை இழக்க நேரிடும்....
வேலு - karur,இந்தியா
2010-07-27 12:49:11 IST
தற்போதைய சூழ்நிலையில் விலைவாசி பிரச்னை மிகவும் முக்கியமானது. ஆகவே அனைத்து கட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். விலைவாசி இதே வேகத்தில் ஏறினால் நடுத்தர மக்களின் நிலை மிகவும் மோசமாகும். எனவே விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது மிகவும் முக்கியமானதாகும். ப்ளீஸ்.....................
kvs - puducherry,இந்தியா
2010-07-27 12:43:39 IST
இந்த காங்கிரஸ் அரசால் மக்களுக்கு எந்த பிரயோஜனமும் இல்லை.விலைவாசி உயர்வு கட்டுபடுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஐந்து வருடம் மக்களை ஏமாத்தி சொந்த வங்கி கணக்கில் காசு சம்படிக்குவதே இவர்களுடய நோக்கம்....
gau - delhi,இந்தியா
2010-07-27 11:47:47 IST
விலைவாசி உயர்வு என்பது இல்லை. இன்றைய நிலையில் அரசு ஆறாவது சம்பள கமிசன் மூலம் சம்பள உயர்வு எவ்வளவு கொடுத்துள்ளது. அதை நினைத்து பார்த்து நெஞ்சைத்தொட்டு சொல்லவும். விலைவாசி உயர்ந்துள்ளது என்றால் இல்லை என்பது தான் உண்மை...
adasdf - dfgdfg,இந்தியா
2010-07-27 09:46:20 IST
yov..naanum rowdi-thanya...
Kumaran - Thiruvallur,இந்தியா
2010-07-27 09:06:18 IST
உங்களுக்கு இந்திய நாடும் இந்திய மக்களும் கைல கிடைச்ச பொம்மை மாதரி. அந்த பார்லிமென்ட் உங்களுக்கு விளையாட்டு மைதானம். என்னைக்காவது மக்களுகாக பேசி இருபீங்கள?.....நாடும் உருப்பிடாது நம்ம மக்களும் உருபிட மாட்டாங்க...
கணேஷ் வீ - chennai,இந்தியா
2010-07-27 08:05:32 IST
please do something to bring down the prices of general commodities.. If this continues, even in city people will start committing suicide......
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக