இந்தியாவின் அனில் கும்ளே, இலங்கையின் முத்தையா முரளிதரன் இணைந்து, பெங்களூருவில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி அகாடமி துவங்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
சமீபத்தில் இந்தியாவுக்கு எதிராக காலேவில் நடந்த முதல் டெஸ்டில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்த முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார். தற்போது கும்ளேவுடன் சேர்ந்து பெங்களூருவில் சுழற்பந்துவீச்சுக்கான பயிற்சி அகாடமி துவங்க திட்டமிட்டுள்ளார்.
இதுகுறித்து அனில் கும்ளே கூறுகையில்,
பெங்களூருவில் சுழற்பந்து வீச்சுக்கான பயிற்சி அகாடமி துவங்குவது குறித்து, ஏற்கனவே முரளிதரனுடன் பேசி உள்ளேன். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றபின் இதுகுறித்து இன்னும் பேசவில்லை. சமீபத்தில்தான் இவர் ஓய்வு பெற்றதால், சில பாராட்டுவிழாவில் கலந்து கொள்ள வேண்டி இருக்கும். எனவே விரைவில் இதுகுறித்து ஆலோசிக்க உள்ளேன் என்றார்.
இதுகுறித்து முரளிதரன் கூறுகையில், கும்ளேவுடன் இணைந்து பயிற்சி அகாடமி துவங்க மிகுந்த ஆர்வமுடன் உள்ளேன். இதுகுறித்து உறுதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக