மீண்டும் ஹீரோவாக நடித்தால், ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்’ என்று சுரேஷ் கூறினார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:82&ல் ஹீரோவாக அறிமுகமானேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என, 28 வருடங்களில் 265 படங்கள் முடித்தேன். தமிழை தொடர்ந்து தெலுங்குக்கு சென்றேன். அங்கு ‘பவானி’ படத்தை இயக்கினேன். 5 படங்களும், டி.வி தொடர்களும் தயாரித்தேன். ‘கிழக்கு கடற்கரை சாலை’ படத்தில் மீண்டும் தமிழுக்கு வந்தேன். பிறகு சின்ன இடைவெளி. அஜீத்தின் ‘அசல்’ மூலம் அடுத்த இன்னிங்ஸ் தொடங்கியுள்ளது. இப்போது வில்லன், குணச்சித்திரம் என வெவ்வேறு கேரக்டர்களில் நடிக்கிறேன்.
ஆதியுடன் ‘ஆடு புலி’, அர்ஜூனுடன் ‘வல்லக்கோட்டை’, ஜீவாவுடன் ‘ரவுத்திரம்’ படங்களில் நடித்து வருகிறேன். ஒரு காலத்தில் நதியா சுரேஷ், ராதா சுரேஷ், ரேவதி சுரேஷ் என, அவர்களுடன் அதிக படங்களில் நடித்ததால், எனக்கு அடைமொழி கொடுத்திருந்தனர். இப்போது ரசிகர்கள் மாறிவிட்டனர். அவர்களது ரசனையும் மாறியுள்ளது. இனி நான் ஹீரோவாக நடித்தால், ரசிகர்கள் ஏற்கமாட்டார்கள். எனவே, வித்தியாசமான வேடங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன். இதற்காக ஐதராபாத்தில் இருந்து சென்னைக்கு வந்துள்ளேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக