திரைப்பட தணிக்கைக் குழுவின் சென்னை மண்டல அதிகாரி ராஜசேகர், லஞ்சம் வாங்கியதாக சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
தமிழ்த் திரைப்படங்களை ஆய்வு செய்து, அவற்றின் தகுதிக்கு ஏற்ப சான்றிதழ் அளிக்கும் தணிக்கை குழுவின் அலுவலகம் சென்னை சாஸ்திரி பவனில் இயங்கி வருகிறது. பல்வேறு உறுப்பினர்களை கொண்ட தணிக்கை குழுவிற்கு, ராஜசேகர் அதிகாரியாக உள்ளார்.
இவர் திரைப்படங்களுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க, லஞ்சம் கேட்பதாக சிபிஐ அலுவலகத்துக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்த புகாரின் அடிப்படையில் சிபிஐ தீவிரமாக கண்காணித்து வந்தது. அப்போது செவ்வாய்கிழமை அன்று தமிழ் திரைப்படம் ஒன்றுக்கு தணிக்கை சான்றிதழ் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கும்போது, சிபிஐ அதிகாரிகள் ராஜசேகரை கைது செய்தனர்.
ராஜசேகரிடம் விசாதணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக