திங்கள், 26 ஜூலை, 2010

ஜெயலலிதா,ராதாபுரத்தில் காமராஜர், கக்கன் சிலை அமைக்க கோரிக்கை

சென்னை : "ராதாபுரம் பஸ் நிலையத்தில் காமராஜர், கக்கன் சிலைகளை, வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் நிறுவ, தி.மு.க., அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போராட்டம் நடத்தப்படும்' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

நேற்று அவர் வெளியிட்ட அறிக்கை:திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பஸ் நிலையம்' என பெயரிட்டு, அங்கு தன் பெற்றோரான அந்த இருவரின் சிலைகளையும் திறக்கும் முயற்சியை, கடந்த ஆண்டு அக்டோபரில் முதல்வர் கருணாநிதி மேற்கொண்டார்.இந்த நடவடிக்கைக்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதை வலியுறுத்தி கடந்த ஆண்டு நவம்பர் 22ம் தேதி அ.தி.மு.க., சார்பில், வள்ளியூரில் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது. இதையடுத்து, ராதாபுரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் பஸ் நிலையம் என்று பெயரிட்டு அங்கு இருவரது சிலையையும் திறப்பதற்கான நடவடிக்கையை கைவிடுவதாக கருணாநிதி அறிவித்தார்.சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தச் சூழ்நிலையில், வேறு வழியின்றி ராதாபுரம் பஸ்நிலையத்திற்கு காமராஜர் பஸ்நிலையம் என்று பெயரிட்டிருக்கிறார் கருணாநிதி.உண்மையிலேயே காமராஜரின் மீது கருணாநிதிக்கு மரியாதை இருந்திருக்குமானால் கடந்த ஆண்டே ராதாபுரம் பஸ் நிலையத்திற்கு காமராஜர் பெயரை சூட்டியிருக்க வேண்டும். ஆனால், அதை கருணாநிதி செய்யவில்லை.இதே போன்று, காமராஜர் பஸ் நிலையத்தில் மக்களின் விருப்பத்திற்கு மாறாக தற்போது நிறுவப்பட்டுள்ள முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் சிலைகளை அகற்றி விட்டு காமராஜர், கக்கன் சிலைகளை நிறுவ தி.மு.க., அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.வரும் அக்டோபர் 2ம் தேதிக்குள் சிலைகளை அமைக்காவிடில், மீண்டும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என, தியாகி சுடலை முத்து அறிவித்துள்ளார். இதற்கு, அ.தி.மு.க., ஆதரவு அளிக்கிறது.இவ்வாறு ஜெயலலிதா அறிக்கையில் கூறியுள்ளார்.
தமிழ் குடிமகன் - Qatar,ரீயூனியன்
2010-07-26 16:29:18 IST
கடந்த 4 ஆண்டுகளாக இல்லாத அக்கறை, இப்பொழுது எப்படி வந்தது ஜெ க்கு. கொடநட்டில் ஓய்வு எடுக்கும் போது இல்லயா இந்த யோசனை. மக்கள் நீங்கள் நினைக்கும் அளவிற்கு முட்டாள்கள் இல்லை. இது 1960 இல்லை. 2010. இன்னும் சிலை திறக்கவும், போராட்டம் நடத்தவும் செய்து கொண்டிருந்தால், நாடு உருப்படுமா? நீ பதவியில் உட்காருவதற்கு நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட வேண்டுமா? நீங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 5 வருடங்கள் சம்பாதிக்காத பணத்தை , சம்பாதிப்பதற்காக நாட்டின் பொருளாதாரத்தை சுரண்டி விடுவீர்கள். தேர்தல் நேரத்தில் குற்றம் சாட்டுவது எதிர் கட்சியின் வேலை அல்ல. சட்ட சபைக்கு தொடர்ந்து சென்று தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். அதெல்லாம் செய்யாமல் சிலை , போராட்டம் என ஏமாற்ற நினைப்பது மடச்செயல். ( மக்கள் கல்வியில் சிறந்து விட்டார்கள். தமிழ் நாடு பழைய பர்கூர் தொகுதியில்லை நடிகர் , நடிகைகளை நம்புவதற்கு)...
ரவி - doha,ரீயூனியன்
2010-07-26 14:55:24 IST
ஆகா..காமராஜர் மேலயும் கக்கன் மேலயும் என்ன அக்கறை...!!!! அம்மா பச்சையம்மா கக்கன் என்ற மனிதர் பெயரை அல்லது வார்த்தையை நீங்கள் உங்கள் வாழ்நாளில் என்றைக்காவது சொன்னது உண்டா...எப்படியும் காங்கிரசோட கூட்டணி கிடைக்காதான்னு நீங்கள் ஏங்கினாலும் உங்களை விட கருணாநிதியோட கூட்டணி பாதுகாப்பானது என்று இளங்கோவனுக்கு தெரியாமலிருக்கலாம்..சிதம்பரமோ பிரணாப் முகர்ஜியோ சோனியாவோ ஏன் அத்வானியோ நம்பத்தயாரில்லை...சந்தோஸ் போன்ற வெத்து வேட்டுகள் எந்நேரமும் கமெண்ட் எழுதிக்கொண்டே இருக்க வேண்டியதுதான். 130 இடங்களுக்கு குறையாமல் திமுக கூட்டணி ஜெயிப்பது உறுதி....
வசந்த் - singapore,இந்தியா
2010-07-26 14:30:45 IST
இன்னும் பத்து நாட்கள் கழித்து எல்லா நீதிபதிகளையும் அழைத்து போராட்டம் செய்யவும். முடிந்தால் சட்ட மந்திரி உள்துறை அமைச்சர் சோனியா குஷ்பூ ராதிகா எல்லாரையும் அழைத்து ஜெயாவுக்கு எதிராக போராட்டம் செய்யவும்.ஜெயலலிதா வேண்டுமென்றே வழக்கை தாமதப்படுத்துரதுக்கு. அப்பனுக்கு புள்ள தப்பாம பொறந்து இருக்கு. உன் அப்பனே பரவாஇல்லை போல இருக்கு,...
Siraj - Jeddah,செனகல்
2010-07-26 14:18:27 IST
அட பன்னாட பாண்டியா, ஊழல பத்தி யார் பேசணும்னு அம்மாவுக்கு நல்லாவே தெரியும். அவங்களுக்கு தெரிஞ்ச அரசியல் - பன்னாடைப்பய உனக்கு எப்படி தெரியும்....
வாசன் - Khobar,செனகல்
2010-07-26 14:00:58 IST
தமிழ் நாட்டில் சிலைகளால் வரும் பிரச்சினைகள் போதாதா மேடம்? ஏன் எரிகின்ற தீயில் எண்ணை ஊற்ற பார்க்கிறீர்கள்? எல்லாம் பாழாய் போன "Vote Bank" படுத்தும் பாடு.. God Save Tamil Nadu / India from Politics.....
சாகுல் ஹமீது - SALEM,இந்தியா
2010-07-26 13:43:30 IST
என்னதான் நடக்குது தமிழ் நாட்டில்..இந்த அம்மாவோட அறிக்கை காலம் ஆரம்பம் போல இருக்கு..ஒன்னுக்கு போனா தப்பு,ரெண்டுக்கு போனா தப்பு..டீ குடிச்சா தப்பு..எல்லாத்துக்கும் அறிக்கைய விட்ட முதல் அரசியல் தலைவி இவர்.....
சிவகுமார் - Bangalore,இந்தியா
2010-07-26 12:19:37 IST
ஏம்மா உங்க ஆட்சியில தலைவருங்க சிலை மற்றும் சமாதிய தவிர எல்லா இடத்துக்கும் உன் பேரையும் உங்க அம்மா பேரயும் வெச்சு அழகு பார்த்தது மறந்து போச்சா . நல்ல வேளை எம்ஜியார் மற்றும் அண்ணா சமாதிகளுக்கு உங்க பேர் வைக்காம விட்டீங்களே :-)...
S.RADHAKRISHNAN - PARIS,பிரான்ஸ்
2010-07-26 12:16:29 IST
அம்மா சிலை வைத்து என்ன புண்ணியம் காமராஜர்,கக்கன் இவர்கள் என்ன கனவு கண்டார்கள்? அவர்கள் நினைத்தது போலவா நீங்களும் அய்யாவும் கடந்த 20 வருடமாக ஆட்சி செய்து என்ன தமிழர்களுடைய வாழ்வு வளமாகிவிட்டாத,? சிலை வைத்து என்ன புண்ணியம்? தடிக்கி விழுந்தா தமிழகத்தில் சிலைதான், கண்ணகி சிலையை ஜோசியம் சொன்னதால் சென்னையில் நீங்கள் அகற்றவில்லையா? சும்மா தேர்தலுக்காக நாடகம் ஆடாதிங்க. காங்கிரஸில் மட்டும் பிளவு இல்லை என்றால் அடுத்த ஐந்து ஆண்டுக்கு விஜயகாந்த் கூட்டணி வைத்து காங்கிரஸ் ஆட்சி அமைகலாம். எல்லாம் மக்கள் கையில்???????????????????...
Rajeesh - Dubai,யூ.எஸ்.ஏ
2010-07-26 12:11:08 IST
நீங்க மட்டும் ஒழுக்கமா? பஸ் நிலையம் முதல் கட்டண கழிவறை வரை உங்கள் பெயரை சூட்டியவர் நீங்கள் தானே? அட உங்கள் பெயரில் ஒரு Transport Corporation கூட ஆரம்பிச்சீங்களே? இப்போ திடீரென்று காமராஜர், கக்கன் என்று பீலா விட ஏதாவது ஸ்பெஷல் காரணம் உண்டா? கக்கூஸ் போக இடமில்லை என்று காக்கா குருவி எதாவது வந்து மனு குடுத்திச்சா?...
ரவி - doha,ரீயூனியன்
2010-07-26 11:55:23 IST
சந்தோஸ் அவர்களே..மக்கள் எல்லா அலைவரிசை செய்தியையும் பார்த்துவிட்டார்கள்..சிந்திக்க போகிறார்கள்...சிந்தித்து கொண்டிருக்கிறார்கள்..மனம் மாறும் என்றீர்களே...உண்மையில் மக்கள் சிந்தித்து விட்டால் பச்சையம்மா ஒருபோதும் கோடநாட்டை விட்டு இறங்கவே முடியாது தெரியுமா? நான் கருணாநிதிக்கு ஆதரவாளன் கிடையாது. ஆனால் ரெண்டுபேருமே ஊழலில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்பதுதான் உண்மை....
ஆயிரத்தில் ஒன்னு - Vellore,இந்தியா
2010-07-26 11:37:34 IST
யோவ் சந்தோசு.. என்னய்யா ஆச்சு உனக்கு? "மக்களை 200 ரூபாய், பிரியாணி கொடுத்து கூட்டி வந்தவராகவே வைத்து கொள்வோம்".. னு சொல்ற? என்ன விட்டா கட்சியோட ரகசியத்தை, உண்மையையெல்லாம் எல்லாம் புட்டு புட்டு வச்சிடுவ போலருக்கு? யோவ் உண்மையை சொல்லுய்யா நீ எந்த கட்சி? ஏன்யா காசு கொடுத்து கூட்டிட்டு வர அளவுக்கு கேவலமான கட்சியாய்யா நம்ம செல்வி. அம்மா கட்சி? சொந்த கட்சி கூட்டத்துக்கு கூட காசு வாங்கிட்டு கூட்டத்துக்கு வர கொள்கையில்லாத கூட்டமாயா நம்ம செல்வி. அம்மா கட்சிகாரங்க? சரி. நமக்குள்ள எதுக்கு பிரச்சினை.. என்னாயிருந்தாலும் நீ சீனியரு. நீ நம்ம கட்சியை பத்தி சொன்னா அது கரெக்டா தான் இருக்கும். ஆனா உன் அளவுக்கு அதாவது இந்தளவுக்கு நம்ம எதுராளுங்க கூட நாம செல்வி. அம்மாவை கேவல படுத்த முடியாதுய்யா. ரொம்ப கிரேட் நண்பா நீங்க....
thiru - thanjavur,இந்தியா
2010-07-26 10:55:02 IST
ஜெயா காமராஜரைப் பற்றிப் பேசுவது வேடிக்கை. தேர்தலுக்காக காய் நகர்த்துவதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கோவையில் மக்களுக்குச் சொன்னதை நிறைவேற்றப்பார்க்கிறார். எந்தப் பேச்சிலும் பொய்களை அடுக்கலாம்.ஆனால் வாசிப்பவர்கள் மக்கள் என்பதை மறக்கக் கூடாது. கலைஞர் காமராஜருக்கு எடுக்கும் விழாக்கள் நாடறிந்தவை. ஏராளம். காங்கிரசாரை விடவும் காமராசரை அடிக்கடி நினைவு படுத்தி பெருமை செய்து வருபவர். பலரும் சந்து கிடைத்தால் லாவணி பாடுவதைக் காலம் கணித்து விடும். காமராஜர் மேல் திடீர் கரிசனம் காட்டுகிறவர் செல்வி ஜெயலலிதா....
Michael - Singapore,ஸ்லேவாக்கியா
2010-07-26 10:39:47 IST
நீங்கள் ஒருகாலத்தில் முதல்வராக இருந்தவர்தானா என்று சந்தேகிக்க வேண்டியிருக்கிறது. சின்ன சின்ன விசயத்துக்கெல்லாம் வேலையில்லாத வெட்டி பசங்களை ஏவிவிட்டு தெருவுக்கு அனுப்புறதே உங்களுக்கு வேலையா போச்சு. கொஞ்சம் நீங்க போயி நின்னு பாருங்க. எவ்வளவு கேவலம் என்பதும் சிரமம் என்பதும் புரிய வரும். உண்மையில் காமராசரும், கக்கனும் இதை விரும்புவார்களா என்பதை எண்ணிப்பாருங்கள். மூலைக்கு மூலை அமைக்கப்படும் இது போன்ற சிலைகளால், அவர்களுக்கு மரியாதை கிடைக்கிறதோ இல்லையோ, அதன் மூலம் பொது மக்களுக்கு சிரமமும், கலவரம் உருவாவதற்கான களமும் உருவாக்கி விடுகிறது. ஆமாமாம்... இதுதானே உங்களை போன்ற உதவாக்கரை மனிதர்கள் பிழைப்பதற்கான ஒரே வழி....
sheihu - Chennai,இந்தியா
2010-07-26 10:23:51 IST
உயிரோடு உள்ளவன் வாழ வழி சொல்ல வக்கில்லை, இறந்தவர்களுக்கு சிலை வைக்க கோரிக்கை வைக்க ஒரு தலைவி..ஏன் தமிழ் நாட்டுக்கு நீங்கள் இரு முறை முதல்வராக இருக்கவில்லையா? அப்போதெல்லாம் சிலை வைக்க தோன்றவில்லையா? அரசு சொத்துக்களை, ஏழைகளின் சொத்துக்களை கொள்ளை அடித்து உலையில் போடும் தொழிலை தான் முழு நேர சிந்தனையாக கொண்டு இருந்தீர்களா? சிலை வைப்பதால் எவனுக்கு என்ன நன்மை? சிலை இல்லாத நாட்டில் எல்லாம் வறுமை ஒழிந்து, ஊழல் ஒழிந்து, கல்வியறிவில் முன்னணி பெற்று, நோய் நொடிகளில்லா வளமான வாழ்வு வாழ்கிறார்கள். திரும்பும் திசையெல்லாம் சிலை வைக்கப்பட்டுள்ள இந்தியாவில் பச்சிளம் பாலகர்கள் நடைபாதையில் பிச்சை எடுக்கிறார்கள்..இதை காண நெஞ்சு பொறுக்குதில்லை இந்த புறம்போக்கு அரசியல் வியாதிகளை எண்ணி..இந்த வியாதிகளுக்காக வரிந்து கட்டும் சில பன்னாடைகளை சொறி சிரங்குகளை என்னவென்று சொல்வதோ?...
hariharan - bintulu,EastMalaysia,இந்தியா
2010-07-26 09:24:55 IST
ஏம்மா ஏற்கனவே சிலைகளால நிறைய பிரச்னை வந்துகிட்டு இருக்கு. இதுல நீங்க வேற புதுசா சிலை வெக்கறதுக்கு ஆர்பாட்டம் பண்ணப்போறீங்க . நாட்டில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கு. விலை வாசி உயர்வு, ரவுடியிசம் ,ஊரெங்கும் கொலை கொள்ளை, சாமியார்களின் அட்டகாசங்கள் இதையெல்லாம் எதிர்த்து ஆர்பாட்டம் பண்ணுங்க....
Arun - nearradhapuram,இந்தியா
2010-07-26 08:27:29 IST
ராதாபுரத்தில் சரியான ரோடு வசதி கிடையாது. பஸ் stand பக்கம் குப்பை மண்ணா இருக்கும். மேலும் ராதாபுரம் டு Vallioor - கு போகும் மினி பஸ்சில் கூட்டம் தாங்க முடியாது. அங்கு யார் சிலையும் வேண்டாம், நல்ல பஸ் வசதி செய்ய வேண்டும். மேலும் அந்த பகுதி மக்கள் விவசாகிகள். விளை பொருட்கள் நல்ல விலைக்கு விற்க ஒரு சந்தை வர வேண்டும். இதை எல்லாம் விட்டு விட்டு சிலை எதற்கு? இங்கு அப்பவு MLA முதல்வரின் மனதில் வித்தியாசமாக இடம் பெற, வித்தியாசமான திட்டம் போட்டு முதல்வரின் தாய் மற்றும் தந்தை சிலையை வைத்து உள்ளார்....
R.Krishnamurthy - Bangalore,இந்தியா
2010-07-26 07:35:37 IST
... சந்திர பாபு நாய்டு போன்று தமிழ் மக்களுக்காகவும் ,தமிழ் நாட்டுக்காகவும் போராடுவது அவசியம். இல்லையன்றால் தமிழகம் ஒரு பாலைவனம் ஆகும். அனால் அதில் மணல் கொள்ளை அடிக்க லாயக்கு அற்ற மண் ....
ஜெயக்குமார் - Chennai,இந்தியா
2010-07-26 07:25:32 IST
எப்படியாவது காங்கிரஸ் காலை நக்கி கூட்டணி வைக்கணும். அது மட்டும் தான் இப்போ அம்மாவுக்கு வேணும். அதுக்காக காமராஜர், கக்கன் மட்டும் அல்ல இனி ராஜிவ்காந்தி, நேரு, இந்திரா காந்தி ஏன் சோனியா காந்தி சிலைய வைக்கணும்னு போராட்டம் நடத்தினாலும் ஆச்சரிய பட ஒன்னும் இல்ல. பாவம் தமிழ் நாடு மக்கள்...
சந்தோஷ்.g - vellore,இந்தியா
2010-07-26 06:39:22 IST
நேற்றைய செய்தியில் வாசகர்கள் சிலர் கூட்டம் கூடுவதை வைத்து வெற்றி வாய்ப்பை கணிக்க முடியாது என்று சொன்னார்கள், சரி ஒரு விதத்தில் அப்படியும் நீங்கள் சொல்லுவது சரி என்று வைத்துகொள்ளலாம், யார் கூட்டம் போட்டாலும் கூடும் ஒத்துக்குறேன், ஆனால் கூட்டத்திற்கு வந்தவர்கள் வெளி மாநிலத்தை சேர்ந்தவர்கள் அல்ல, தமிழகத்தை சேர்ந்த வாக்காளர்கள் தானே, உங்கள் வழியில் மக்களை 200 ரூபாய், பிரியாணி கொடுத்து கூட்டி வந்தவரகவே வைத்து கொள்வோம். ஆனால் அம்மா எழுப்பிய பலமான குற்றச்சாட்டுக்கள் மக்களை யோசிக்க வைத்திருக்கும், எத்தனை தொலைகாட்சி அலைவரிசையில் ஒளிரபரப்பபட்டது, எத்தனை செய்திதாள்களில் அந்த குற்றச்சாட்டுக்கள் வெளியிடப்பட்டது, தமிழ்நாடு முழுவதும் இந்த குற்றச்சாட்டுக்கள் மக்களிடம் நேரடியாக சென்று சேர்ந்திருக்கும், முதலில் 200 ரூபாய்க்கு வந்த மக்களாக இருந்தாலும் மாநாட்டிற்கு வந்து காது கொடுத்து கேட்ட பிறகு மனம் மாறியிருக்கும், இதே போன்று ஒவ்வொரு கண்டன ஆர்பாட்டத்திலும் எழுப்பப்படும் குற்றச்சாட்டுக்கள் தான் திமுக அரசுக்கு எமன்....
2010-07-26 06:18:31 IST
அம்மா நீங்க சுத்தமா அரசியல் அறிவிலியாக காட்சி அளிக்கிறீர்கள். உங்களுக்கு இன்னும் கொஞ்ச நாளே இருக்கிறது, அதற்குள் தேர்தல் வந்து விடும். நீங்க மக்களின் கொழுந்துவிட்டு எரியும் பிரச்சனைகளை விட்டு விட்டு ஒண்ணுக்கும் உதவாத கக்கன், காமராஜ் சிலை பிரச்சனையை பற்றி கவனம் செலுத்தி உங்கள் அறிய சமயத்தை வீணாக்குகிறீர்கள். இதனால் நீங்கள் எந்தவித அரசியல் பலனும் அடைய முடியாது. காவேரி பிரச்சனையில் பெங்களுருக்கும் முல்லை பெரியார் பிரச்சனையில் கேரளாவுக்கும் ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனையில் கோபாலபுரத்திர்க்கும் நீங்களே முன்னின்று கூட்டணி தோழர்கள் வைகோ, பாண்டியன், மற்றும் இடது கம்யூனிஸ்ட் தோழர்களுடன் நடை பயணம் மேற்கொள்ளுங்கள். அப்புறம் பாருங்கள், சந்திரபாபு நாய்டு மாதிரி ஒரே நாளின் சூப்பர் உமன் ஆகிவிடலாம். நீங்கள் இவரின் குடும்ப லஞ்ச லாவண்யத்தை அட்டாக் செய்யுங்கள்; மக்களுக்கு புத்தி வரும்....
முஹம்மத் KjM - Madurai,இந்தியா
2010-07-26 04:59:11 IST
சிலைக்கு சண்டையா? மக்களின் வரிப்பணத்தை நினையுங்கள். மக்கள் சிறு பொருள் முதல் அனைத்து பொருளுக்கும் வரி கொடுக்கின்றனர். கஷ்டப்படும் ஏழையை நினைத்து பயன்பெற திட்டம் தீட்டுங்கள் அல்லது ஒத்துழையுங்கள். நடுத்தர மக்களையும் அவசியம் நினைத்து திட்டம் போடுங்கள். அப்போது தான் சமூக நீதி காக்க முடியும். கலைஞரின் ஒரு ரூபாய் அரிசி திட்டம் மிகவும் பயனுள்ள ஒன்று. 100 நாள் வேலை திட்டம், கலைஞர் காப்பீட்டு திட்டம், சமத்துவபுரம், வீடு இல்லாத ஏழை களுக்கு காங்கிரீட் வீடு, இலவச கண்ணொளி திட்டம், உழவர் சந்தை ( பச்சை கரி மார்க்கெட் என்று இதை கேரளா மக்கள் கூட பாராட்டுகிறார்கள்) மாற்று திரனாளிகள் திட்டம் ஆகியவை பாராட்ட தக்கவை. இத்திட்டங்களை எந்த அளவு செயல்படுத்துகிறார்கள், இதில் சரியாக செயல் முறை இருக்கிறதா என்று மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் விவரம் பெற்று குறை இருந்தால் நிவர்த்தி செய்ய வேண்டும். தமிழ் மக்களின் நன்மையை கருதி கலைஞர் அறிவித்தது போல் ஆங்கில உரையாடல், அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் பயிற்சி மற்றும் கம்ப்யூட்டர் பயிற்சி, கொடுக்க எதிர் கட்சிகள் உள்பட ஒத்துழைக்க வேண்டும். பதவியே கதி என்று இருக்க கூடாது. மத்திய அரசு கொண்டு வந்த 8 ஆம் வகுப்பு வரை கட்டாய கல்வி மற்றும் அனைவரும் பாஸ். இது போன்ற திட்டம் தான் காமராஜர் கண்ட கனவு. சிலை அல்ல. அதை விரிவாக்கம் செய்து SSLC வரை செயல் படுத்த வேண்டும். அதிக மார்க் உள்ளவர்கள் தானே உயர் கல்வி படிக்கபோகிறார்கள். ஆகையால் இதையும் யோசிக்கலாம்....
தமிழ்தாசன் - kuwait,இந்தியா
2010-07-26 03:38:24 IST
முத்துவேலர், அஞ்சுகத்தம்மாள் இவர்கள் இருவரும் என்ன தியாகிகளா.இல்ல இவுங்க நேரு குடும்பமா.உங்களோட புள்ளய்களுக்கு எவளவு சொத்து சேர்க்கணுமோ சேர்த்தாச்சு. இப்ப பெத்தவுங்களுக்கு தமிழ் நாடு எல்லா சிலை வைக்கரிங்களா.இன்னும் 50 வருடம் அப்பறமா இவங்க குடும்பதா தமிழ்நாட்ட ஆண்டுவந்த மன்னர் குடும்பம்னு சொல்லுவாங்க போலிருக்கு...
நல்லவன் - chenna,இந்தியா
2010-07-26 03:19:09 IST
மற்ற பெரிய நாடுகளை பார்த்து நாம் கற்று கொள்ள வேண்டியது ரொம்ப உள்ளது. ஏன்டா இப்படி சிலைகளை வைத்து நாட்டை கெடுக்கிரீர்கள். இதற்கு இந்த ..... வேறு சப்போர்ட்....
செந்தில்குமார், - ஜெட்டாஹ்,சவுதிஅரேபியா,இந்தியா
2010-07-26 01:45:18 IST
போராட்டங்கள் நடத்த என்னென்ன காரணங்கள் தேடவேண்டியதாக இருக்கிறது. அர்த்தமற்ற போராட்டங்களால் தொடர்ந்து பொது மக்களை இம்சை செய்வதை விடுவதாக இல்லை என்று நன்கே புரிகிறது....

கருத்துகள் இல்லை: