வாகரைப்பிரதேசத்தில் பொதுமக்களால் கண்டுபிடிப்பட்ட அம்மனின் முகக்கலையினை (முகவடிவம்) அந்த இடத்திலேயே ஆலயம் அமைத்து வழிபாடு செய்வதற்கு கிழக்கு மாகாண முதலமைச்சர் அனுமதி வழங்கியுதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அண்மையில் கண்டெடுக்கப்பட்ட அம்மனின் முகக்கலையினை ஆலயம் அமைத்து வழிபாடு செய்வதற்கு அனுமதிக்குமாறு பொதுமக்கள் கோரி வருகின்ற நிலையில் நேற்று வாகரை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் தலைமைதாங்கிய முதலமைச்சர் இந்த அனுமதியினை வழங்கினார்.
இந்தக் கூட்டத்தில் பொதுமக்களின் விருப்பத்தினை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்குமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் திரவியம் ஆகியோர் முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து அவர் இந்த அனுமதியை வழங்கியுள்ளார்.
இருப்பினும் வாகரைப் பொலிஸார் தம்மிடம் வைத்துள்ள குறிப்பிட்ட முகக் கலையினை வாழைச்சேனை நீதி மன்றத்தில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் இவ்விடயத்தில் நீதிமன்றத்தின் அனுமதிக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக