பிரபுதேவா - நயன்தாரா சமாச்சாரத்தில் ‘"காதலா? காமமா?' என விவாதம் நடப்பதாக சொல்கிறார்கள் விஷயம் அறிந்த வர்களும், புரிந்தவர்களும்.
பிரபுதேவா "வி.ஐ.பி' படத்தில் நடித்துக் கொண்டிருந்த சமயம் ரமலத்தை காதல்கல்யாணம் செய்துகொண்டார். குடும்பத்தினர் எதிர்ப்பால் அந்தச்சமயம்அவர்கள் தலைமறைவானபோது அவர்களுக்கு சில உதவிகளைச் செய்தவர் கலைப்புலிதாணு. ஆசை ஆசையா காதலியை கைப்பிடித் தாலும் நடிகைகள் விஷயத்தில் அப்படிஇப்படித்தான் இருந் தார் பிரபுதேவா. அண்ணன் ராஜு சுந்தரம் சிம்ரனை தீவிரமாக காதலித்துக் கொண்டிருந்த போது குறுக்கே புகுந்து அந்த காதலை கட் பண்ணியவர் பிரபுதேவாதான். ‘"டைம்' படத்தில் பிரபு தேவாவோடு நடித்த ராதிகாசௌத்ரி "பிரபுதேவா டார்ச்சர் தாங்க முடியல. அவரோட விருப்பத்திற்குஉடன்படாததால் என்னை இருட்டடிப்பு செய்து விட்டார்' என கிரங்கமாக ட்டியே கொடுத்தார்.
இரண்டு குழந்தைகள் பிறக்கும் வரைக்கும் தன் அப்பா, அம்மாவோடு பேசாமலேஇருந்த பிரபுதேவா அதன் பிறகு பேசிக்கொண்டார். மகனை ஏற்றுக் கொண்ட பிரபுதேவா குடும்பம் மருமகளை ஏற்றுக்கொள்ளவில்லை. மூத்த குழந்தைக்கு கேன்ஸர் ஏற்பட்ட பிறகுதான் மருமகளையும், பேரப்பிள்ளை யையும் ஏற்றுக்கொண்டார்கள்.
இறுதிநாட்களை பிரபுதேவாவின் மகன் எண்ணிக்கொண்டிருந்த நேரத்தில் மிகுந்த மனவேதனை யில் இருந்தார் பிரபுதேவா. அந்தச்சமயம் "வில்லு' படம் சம்பந்தமாக பிரபுதேவாவும் நயன் தாராவும் சந்தித்துக் கொண்டார்கள்.
"வல்லவன்' படத்தில் நடிக்கத் தொடங்கியதி லிருந்து சிம்புவும், நயன்தாராவும் காதலிக்கத் தொடங்கினார்கள். அதன் பிறகு சண்டை போட்டு பிரிந்தார்கள். அப்புறம் விஷாலுடனும், பிரபல கேமராமேன் நீரவ்ஷாவுடனும் நயன்தாராவை இணைத்து செய்திகள் வந்தன. இந்த நிலையில் நயன்தாராவும்,சிம்புவும் நெருக்கமாக இருக்கும் பெர்ஸனல் புகைப்படங்கள் வெளியாகி நயன்தாராவுக்கு மிகுந்த மன உளைச்சல் ஏற்பட்டது. அந்தச்சமயத்தில்தான் நயன்தாராவும், பிரபுதேவாவும் சந்தித்துக் கொண்டார்கள்.
அப்புறம்தான் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதலாகி கசிந்துருகியதும்‘"நயன்தாராவை அடிப்பேன்' என ரமலத்தும், "பல்லை உடைப்பேன்' என நயன்தாரா வும் மோதிக் கொண்டது தெரிந்த சங்கதிதானே.இதுவரை பிரபுதேவாவும், நயன்தாராவும் இந்த காதல் விஷயத்தை மீடியாவிடம் மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை... மழுப்பிக்கொண்டே வந்தார்கள்.
இப்போது நயன்தாரா மீதான காதல் குறித்து இணைய பத்திரிகை ஒன்றில் மனம் திறந்து சொல்லியிருக்கிறார் பிரபுதேவா.""நயன்தாரா எனக்கு ரொம்ப விசேஷமானவர். நான் அவரை லவ் பண்றேன். சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கப் போறோம். ஒரு காதலன் தன் காதலிகூட அதிக நேரம் இருக்கத்தான் ஆசைப்படுவான். நானும் அதற்கு விதிவிலக்கு கிடையாது. நான் கஷ்டப்பட்ட போது ஆறுதலாக இருந்த நயன்தாரா எனக்கு பாலைவனத்தில் சோலை போல தெரிந்தார். அவர் ஒரு அற்புதமான மனிதப்பிறவி.''இப்படி உருகஉருக சொல்லியிருக்கிறார்.
இதுகுறித்து பிரபுதேவா ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.
""நயன்தாரா கிறிஸ்தவர் என்பதால் ஏற்கனவே கேரளாவில் ஒரு சர்ச்சில் மோதிரம் மாற்றிக் கொண்டார்கள். அது முறைப்படியான கல்யாணம் இல்லாவிட்டாலும் அது கிட்டத்தட்ட கல்யாணம் போலத்தான். அந்தச் சமயம்தான் கேரளாவில் நடந்த டைரக்டர் சித்திக்கின் மகள் திருமணத் திற்கு தம்பதியாக வந்து வாழ்த்தினார்கள். ஆனாலும் ரமலத்தின் எதிர்ப்பு காரணமாக இருவருமே மௌனம் காத்தார்கள். இப்போது ஈசிஆர் ரோட்டில் நிலம் உட்பட சில செட்டில்மெண்ட் விஷயங்களை ரமலத்திற்கு செய்துவிட்டார் பிரபுதேவா. மனைவியை சமாதானப்படுத்தி விட்டதால்தான் இப்போது பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். விரைவில் நயன்தாராவை பதிவுத் திருமணம் செய்யவிருக்கிறார்'' என்றார்கள்.நயன்தாரா ஆதரவாளர்களிடம் விசாரித்தோம்.
""நயன்தாரா யாரையும் கஷ் டப்படுத்திப் பார்க்க விரும்பாதவர். இளகிய மனம் கொண்டவர். அப்படிப்பட்டவர் ரமலத்தின் வாழ்க்கை யை கெடுத்து அந்த வாழ்க்கையை தனக்கு சொந்தமாக்க நினைப்பாரா? "வில்லு' படப்பிடிப்பு நடந்த சமயம் பிரபுதேவாவின் மூத்த மகனுக்கு கேன்ஸர் இருப்பது தெரிந்தது அவனுடன் பிரியமாக பழகினார் நயன்தாரா. பிரபுதேவாவுக்கும் ஆறுதல் சொன்னார். இப்படி நல்ல நண்பர்களாக பழகிக்கொண்டிருந்த நேரத்தில்தான் "தன் மனைவியோடு வாழபிடிக்கவில்லை... விவாகரத்து செய்யப்போகிறேன்... உங்களமாதிரி ஒரு அன்பான பெண் கிடைச்சா என்னோட மனக்கவலை யெல்லாம் தீரும்' என கண்கலங்கினார் பிரபு தேவா. தொடர்ந்து நயன்தாராவிடம் காதலை வலியுறுத்தியும் வந்தார்."நீங்க சட்டரீதியா உங்க மனைவியை விவாகரத்து செய்றதா இருந்தா நான் உங்க காதலை ஏத்துக்கத் தயார்' என நயன்தாரா சொன்னார். அதற்கான ஏற்பாடுகளைசெய்வதாக பிரபுதேவா கொடுத்த வாக்குறுதிக்கு பின்னாடி தான் பிரபுதேவாவின் காதலை ஏற்றுக்கொண்டு கையில் பச்சை குத்திக் கொண்டார்.
நயன்தாராவை தன் கட்டுப் பாட்டுக்குள் முழுசாக கொண்டு வந்த பின் பிரபுதேவாவின் போக்கில் மாற்றம். "ரமலத்தை கைவிடமுடியாது. ஆனா நீயும் வேணும். நீ இல்லாம என்னால இருக்க முடியாது' எனச் சொல்ல ஆரம்பித்தார்.வெறும் ஆசைநாயகியைப் போல் வைத்துக் கொள்ள விரும்பும் பிரபுதேவாவின் போக்கு பிடிக்கவில்லை நயன்தாராவுக்கு. ‘"பாஸ் என்கிற பாஸ்கரன்'படப்பிடிப்பு கும்பகோணத்தில் தொடங்கிய சமயம் அங்கேயே போய் டேரா போட்டார்.
பிரபுதேவா.... சில மாதங்களுக்குப்பின்... அதே படத்தின் இறுதிக்கட்டபடப்பிடிப்பு ஏ.வி.எம். ஸ்டுடியோவில் நடந்தபோது... பிரபு தேவாவுக்கு போன் பண்ணினார் நயன்தாரா. ஒரு முக்கியமான மீட்டிங்கில் இருப்பதாகச் சொன் னார் பிரபுதேவா. ஆனால் பிரபு தேவா தன் மனைவியோடு வீட்டில் இருப்பதை தெரிந்துகொண்டு காரை எடுத்துக் கொண்டுபோய் பிரபு தேவா வீட்டு தெருவில் காரிலேயே காத்திருந்து பிரபுதேவாவை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். அந்த எரிச்சலில் தான் நயன்தாரா பட்டினியாகவே கிடந்து படப்பிடிப்பில் மயங்கி விழுந்த சம்பவமும் நடந்தது.
"என்னை ஆள விட்றுங்க. நீங்க உங்க மனைவிகூட சேர்ந்து வாழ்ந்தா சந்தோஷம்தான்' என பிரபுதேவாவிடம் சொல்லிவிட்ட நயன்தாரா... கடந்த இருபது நாட்களாக அவர்கூட பேசவே இல்லை. தனது பட புரமோஷன்களுக்கு வராமல் இருந்த நயன்தாரா "பாஸ்' படத்திற்கு வந்தார். தனது மேனேஜரிடமும் "புதுப்பட கமிட்மென்ட்டுகள் வந்தால் பேசுங்கள்' எனச் சொல்லி விட்டார். இதனால் நயன்தாரா தன்னைவிட்டு போய்விடுவாரோ என்கிற கவலை வந்துவிட்டது பிரபுதேவாவுக்கு.
நயன்தாரா பத்திரிகையாளர்களிடம் பேசுவதில்லை. அதே சமயம் அவரைப்பற்றி வரும் செய்திகளுக்கு குறிப்பிட்ட இணையதள பெண் நிருபரிடம் மட்டும் மனம்விட்டு கருத்து களைச் சொல்லுவார். இந்த நிருபர் நயன்தாராவுக்கு நல்ல தோழி போல இருப்பவர். அதனால்தான் தன்னை புறக்கணிக்கும் நயன் தாராவிடம் மனம்விட்டு சில கருத்துக்களை சொல்ல விரும்பிய தோடு... நயன்தாராவை தன்னுடனே இருக்க கமிட் பண்ணிக் கொள்ளும் விதமாக... குறிப்பிட்ட அந்த இணையதள பெண் நிருபரை கூப்பிட்டு பேட்டி கொடுத்திருக்கிறார் பிரபுதேவா.
பிரபுதேவாவின் செட்டில்மென்ட்டுக்கு இதுவரை ரமலத் ஒப்புக்கொள்ளவில்லை.அதே சமயம் நயன்தாரா இரண் டாந்தாரமாக வேண்டுமானால் இருந்து தொலையட்டும் என்கிற மனநிலைக்கு வந்துவிட்டார் ரமலத்.
ஆனால் இதில் நயன்தாரா குடும்பத்தினருக்கு விருப்பமில்லை. "ஊரறிய நயன்தாராவை மனைவியாக்க வேண்டும்' என்கிறார்கள். "விரைவில் நயன்தாராவை திருமணம் செய்து கொள்ளுவேன்' என அறிவித்திருக்கும் பிரபுதேவா ‘மனைவிக்கு செட்டில்மென்ட் செய்து விட்டதாகவோ அல்லது விவாகரத்து செய்யப்போவதாகவோ சொல்லவில்லை. அவருக்கு நயன்தாரா மீது இருப்பது காதலா... காமமா? நீங்களே சொல்லுங்கள்...'' என நம்மிடம் கேட்டார்கள்.
இதுல நம்ம கருத்து என்னான்னா?.....நோ கமெண்ட்ஸ்!- இரா.த.சக்திவேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக