குடாநாட்டு லேகிய வியாபாரிகள் மீது அதிகாரிகள் குழு திடீர்ப் பாய்ச்சல் : பல லட்சம் ரூபா தண்டம்
யாழ். மாவட்டத்தில் லேகிய விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்கள் மீது கொழும்பில் இருந்து வந்த அதிகாரிகள் குழு திடீர் நடவடிக்கை எடுத் துள்ளது. பலர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றங் களின் முன்நிறுத்தப்பட்டுள்ளார்கள்.
நீண்ட காலமாகத் தொடர்ந்து வந்த போர் காரணமாக வடக்கு, கிழக்கில் சிவில் நிர்வாகம் முழுமையான அளவில் இல்லாதிருந்தது. வர்த்தக நடவடிக்கைகள் மீதான சட்ட திட்டங்களும் முறையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வர்த்தகர்கள் தாம் நினைத்த பொருள்களை நினைத்த விலையில் விற்பது, யாழ்ப்பாணம் உட் பட வடக்கு கிழக்கு மாவட்டங்களில் சாதாரண மாக இருந்து வந்தது. வெறுமனே பிரதேச செயலகங்களில் பெறப்பட்ட அனுமதியுடனும் வருடாந்தம் பிரதேசசபைகளுக்குச் செலுத்தும் வரியுடனும் தமது வர்த்தக நடவடிக்கைகளை மேற் கொண்டு வந்தார்கள்.
எவற்றை அரசின் விசேட அனுமதி பெற்று விற்கவேண்டும் எவற்றை விற்கக்கூடாது என்பன போன்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. இதுபோன்றே யாழ்ப்பாணத்தில் பல கடைகளில் லேகிய விற்பனையும் அமோகமாக நடைபெற்று வந்தது.
“சிட்டுக் குருவி லேகியம்’, “தங்க பஸ்பம்’, “மதன மோகினி’, “பம்பரம்’ என்ற பல்வேறு பெயர் களில் லேகியங்கள் கடைகளில் விற்பனையாகி வந்தன.
இந்நிலைமையில் கொழும்பில் இருந்து வந்த விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் குழு லேகிய வியாபாரிகள் மீது திடீர் பாய்ச்சல் நடத்தி உள்ளது. பொலிஸாரின் ஆதரவுடன் கடந்த ஒரு வார காலமாக நடத்தப்பட்ட இந்த தேடுதலில் இதுவரை 10க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மாவட்டத்தின் பல்வேறு பகுதி களிலும் உள்ள நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்ட இவர்களுக்கு விதிக்கப்பட்ட தண்டப் பணம் பல லட்சங்களைத் தாண் டும் என்று நீதிமன்ற வட்டாரங் கள் தெரிவிக்கின்றன.
யாழ். மாவட்ட வர்த்தகர்ளைப் பொறுத்த வரையில் இன்னும் தாம் எத்தகைய பொருள்களை வர்த்தக நிலையத்தில் வைத்து விற்பனை செய்யலாம் குறிப்பிட்ட சில பொருள்களை விற்பனை செய்வதானால் அதற் கான அனுமதியை எந்த அமைச்சிடம் இருந்து பெறவேண்டும் என்ற விவரங்கள் தெரியாத நிலைமை காணப்படுவதாக வர்த்தக சங்கப் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார். இதுவே இன்றை நெருக்கடிக் கான முதன்மைக் காரணம் என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக