திங்கள், 30 ஆகஸ்ட், 2010

பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனைக

இலங்கைப் பணிப்பெண்கள் தொடர்பில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு புதிய நிபந்தனைகளையும் கொள்கைகளையும் விதிப்பதற்கு இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தீர்;மானித்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களின் ஊடாக இந்த அறிவித்தல் விடுக்கப்படவுள்ளதென இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பொது முகாமையாளர் எல்.கே.ருகுணுகே தெரிவித்துள்ளார். பணிப்பெண்களை நியமிக்குமுன் இந்த நிபந்தனைகளுக்கும் கொள்கைகளுக்கும் மேற்படி நாடுகள் இணக்கம் தெரிவிக்க வேண்டுமென்றும், பணிப்பெண்களின் பாதுகாப்பை குறித்த நாடுகளின் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை: