jaffnamuslim.com : கொழும்பில் சீனர்களால் கொல்லப்பட்ட சக சீனர் தொடர்பில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி கொல்லப்பட்டவன் சர்வதேச கணினி குற்ற வலையமைப்பின் தலைவரும் கோடீஸ்வரருமான ஹாவோ போன் என்ற சீனப் பிரஜை ஆவான்.
கணினி குற்றங்கள் மூலம் சம்பாதித்த கோடிக்கணக்கான ரூபாய் பணம் தொடர்பான கடுமையான தகராறு இந்த கொலைக்கு காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஞாயிறு, 26 ஜூலை, 2026
கொழும்பில் சீன குழுக்களிடையே மோதல் ஒரு சீன கோடீஸ்வரர் உயிரிழப்பு
முன்னாள் அமைச்சர் ரகுபதி :சட்டப்பேரவை கதவுகளை மூடுவதாக முதல்வர் கூறியது குறித்து உரிமை மீறல் பிரச்சினை கொண்டு வரப்படும்
hindutamil.in : பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தவெக ஆட்சியில் பேச்சுரிமை பறிக்கப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில்கூட இருந்த பேச்சுரிமை விஜய் ஆட்சியில் இல்லை. அரசை விமர்சித்து சாதாரண பேச்சுவாக்கில் பேசுபவர்கள் மீதெல்லாம் பொய் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.
மேலும், சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி வழக்குகளை முடுக்கிவிட டிஎஸ்பிக்கள் மூலம் நீதிபதிகளுக்கே சட்டத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில் உள்ள பொது மலசலகூடத்தின் நிலைமை
Murugesu Kanagalingam : நல்லூர் கந்தசாமி கோயில் சுற்றாடலில் உள்ள பொது மலசலகூடத்தின் நிலைமை என்று தலைப்பிட்டு ஒரு அன்பர் படங்களுடன் பதிவு ஒன்றைப் போட்டிருந்தார்.
இங்கிருந்து படத்தைப் பார்க் கும்போதே,குமட்டலோடு,வாந்தி வருமாற் போல இருக்கிறது.
இவற்றைப் பார்க்க நேரி டுவது பாவம் செய்த கண்களுக்கே நேரும்.
அந்தப் பதிவாளர் மாநகர மேயரையும் சாடி யுள்ளார். உண்மையில்,நிர்வாகங்கள் இவற்றைக் கவனிக்க வேண்டிய கடமைப்பாடுடையவர்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை, கிடையாது.
மறுபுறம்,எமது மக்கள் எப்போதும் வெறும் காட்டான்களாகவே இருக்கிறார்கள்.