சென்னை சபாக்களிலேயே பழமை வாய்ந்த ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி சபா துவங்கி, இந்த ஆண்டுடன் 110 வருடங்கள் ஆகிவிட்டன. இந்த ஆண்டு இசை மழலைகளின் இசைத் திறமையை போற்றி மேடை வாய்ப்புடன் ஊக்குவிக்கும் வகையில் நங்கநல்லூர் சத்குரு ஸ்ரீ தியாகராஜ சங்கீத சமாஜம் மற்றும் ராம்ஜியின் இசை மழலை அமைப்பும் இணைந்து நங்கநல்லூர் ரஞ்சனி ஹாலில் ஒரு வாரம் கச்சேரி நடந்தது. இதில் ராம்ஜியின் இசை மழலை குழுவினருடைய கச்சேரி கோலாகலமாக ரசிகர்களின் வரவேற்பை பெற்றன. கிட்டத்தட்ட 44 மழலைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று திறமையாக பாடினர். டாக்டர் நல்லி குப்புசாமி கலையை வளர்க்கும் ஆர்வத்தையும் எடுத்துரைத்து பாராட்டி பேசினார். தூர்தர்ஷன் முன்னாள் இயக்குனர் நடராஜன் இன்று சிகரத்தில் உள்ள இசைக் கலைஞர்களை முதலில் சென்னை தொலைக்காட்சியில் பாடவைத்த பெருமையையும், சுவைபட ரசிகர்களுக்கு எடுத்துரைத்தார். இசை மழலை ராம்ஜி தம் உரையில் குழந்தை மேதைகளாக கருதப்பட்ட டாக்டர் பாலமுரளி, வீணை காயத்திரி, ரவிகிரண், மாண்டலின் சீனிவாஸ் போன்று அந்த காலத்தில் அரிதாகவே இருந்த நிலையை மாற்றி சிறு வயதிலேயே திறமையை இனம் கண்டு பயிற்சியளித்து மேடையேற்றுவது லட்சியம் என்றார். இந்த விழாவின் துவக்க நிகழ்ச்சியே இசை மழலை இளம் சாய் விக்னேஷின் இசை நிகழ்ச்சி. இந்த இளம் வயதில் இப்படி சங்கீதத்தின் வல்லின, மெல்லின, குழைவு, கமம் நயத்துடன் சிறப்பாக பாடியது புருவங்களை உயர்த்தும் வகையில் இருந்தது. சித்தி விநாயகம் (அரிகேச நல்லூர், மோகன கல்யாணி) மாமவது ஸ்ரீசரஸ்வதி (இந்தோளம் - ஸ்ரீ தீட்சிதர்) இதன் மதுரமான ஸ்வரங்கள் சுவாதி திருநாளின் போகீந்த்ர சாயி (குந்தலராளி) எல்லாமே கச்சிதமான சங்கதிகளுடன் நயமாக இருந்தன. பிரதான சிம்மேந்திரமத்யமம் ராகம் பாடுவது படுகஷ்டம். முரட்டுக்குதிரை சவாரி போலத்தான். ஆனால், சாய் விக்னேஷ் பாடிய விதம் இந்த வயதில் நல்ல ஞானத்துடன் அக்கறையாக விரிவுகளை அழகாக விஸ்தரித்து பாடியது மிகவும் ரசிக்க வைத்தது. நிகழ்ச்சியின் பிற்பகுதியில் அம்புஜம் கிருஷ்ணாவின் ஓம் நமோ நாராயணா (கர்ணரஞ்சனி) மற்றும் கமாங்தில்லானா எல்லாமே மதுரமாக கையாண்டு வழங்கப்பட்டன. இசை மழலை சாய் விக்னேஷின் குரு லட்சுமி அனந்த கிருஷ்ணனுக்கு எல்லா பெருமையும் சேரும். வயலினில் அனுசரணையுடன் வாசித்த சுதர்சன் பிரபாவதியின் சிஷ்யன். கச்சிதமான வாசிப்பு. மிருதங்கத்தில் இளம் அஸ்வினி நயமாக பாட்டுடன் ஒன்றிய வாசிப்புடன் மனம் கவர்ந்தார். இவர் பிரபல மிருதங்க வித்வான் டாக்டர் டி.கே.மூர்த்தியின் சிஷ்யை. வீணை இசை: இரண்டாவது நிகழ்ச்சியில் இசை மழலை அஞ்சனியின் வீணைக் கச்சேரி இடம் பெற்றது. இவர் பிரபல வீணை விதூஷி ஈ.காயத்ரியின் தாயார் விதூஷி அசுவத்தாமாவின் மாணவி. அந்த காலத்தில் காயத்திரியின் விரல்களின் விறுவிறுப்பான மீட்டினை இந்த நிகழ்ச்சியில் கேட்பது போல், அஞ்சனியின் வாசிப்பில் தங்கு தடையின்றி ஒரு ஓட்டம் இருந்தது. ஸ்ரீ தியாகராஜருடைய ப்ரோவ பாரமா (பகுதாரி) சுகமான கிட்டை ஸ்வரத்துடன் இருந்தது. கானமூர்த்தே கீர்த்தனை ராகஜீவன் ததும்ப இருந்தது. அடாணாவில் அனுபவ குணாம்புதி விறுவிறுப்பு வியக்க வைத்தது திறமை. பிரதான கல்யாணியின் ஆலாபனையில் சற்றே ஆழம் குறைந்து ஜனரஞ்சகம் தலைதூக்கி நின்றது. அனுபவம் ஏற ஏற சரியாகி விடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஸ்ரீதியாகராஜ கிருதி நன்றினை நிரவல் ஸ்வரங்களுடன் நேர்த்தியாக வாசித்தது மனம் கவர்ந்தது என்றாலும், இந்த வேகம் மட்டும் சற்று குறைந்து சங்கதிகளில் இன்னும் ஸ்வரங்தானங்களில் நிதானமாக நின்று வாசித்தால், இன்னும் சிறப்பாக இருக்கும் வாசிப்பு என்பதே கணிப்பு. இந்த நிகழ்ச்சியிலும் இசை மழலை அஸ்வினியே சிறப்பாக வாசித்ததோடு தனி ஆவர்தனம் பாராட்டும் படி உழைப்புடன் இருந்தது. ஸ்ரீ சாய்நாத் கடம் வாசிப்பு சில இடங்களில் பளிச்சென்றும், பல இடங்களில் டல்லாகவும் இருந்தது. -சுப்ரஜா
இசை மழலை சுப்ரஜாவின் குரல் மதுரமாக உள்ளது. பிரபல விதூஷி ராஜி கோபாலகிருஷ்ணனின் மாணவ மணிகளுள் இவரும் ஒருவர் என்பது இவர் இசை வழங்கிய முறையில் புரிந்தது. ஹரிகேசநல்லூர் முத்தையா பாகவதருடைய ராஜமாதங்கி(சுத்த தன்யாசி) வர்ணமே நிகழ்ச்சியின் களைகட்டிய துவக்கமாக இருந்தது. நிகழ்ச்சியில் சுப்ரஜாவின் அமீர் கல்யாணி மற்றும் பிரதான கரஹரப்ரியா இரண்டுமே கச்சிதமாக இருந்தது. அனாவசியங்கள் இல்லாமல் தெளிவான முயற்சியாக இருந்தது. பாபநாசம் சிறுவனுடைய ஜானகிபதே கீர்த்தனையை மதுரமாகப் பாடி நிரவல் - ஸ்வரப்ரங்தாரத்தை நல்ல கற்பனைகளுடன் பாடியது இந்த வயதில் பாராட்டும்படியான செயல். வயலினில் இசை மழலை ஸ்ரீராம் ஸ்ரீ தருடைய வாசிப்பு படுகச்சிதம். அனுசரணை குரு பத்மா சங்கரைப் போலவே, என்.சி.பரத்வாஜ் மிருதங்க வாசிப்பும் சிறப்பாகவே இருந்தது. ஆதித்ய நாராயணன்: இசை மழலை ஆதித்ய நாராயணன் இசை நிகழ்ச்சியில் அவருடைய இசையார்வம் உழைப்பு தெரிந்தன. கிட்டத்தட்ட கிட்டப்பா சாரீரம் இருவருக்கு உள்ளது சிறப்பான அம்சம். பிரபல இசை விதூஷி சுகுணா வரதாச்சாரியின் சிஷ்யர் என்று அறியப்படுகிறது. கதனகுதாகல ராக வர்ணத்துடன் நிகழ்ச்சியே குதூகலத்துடன் துவங்கியது. நல்ல லயஞானம் தெரிந்தது. ஆதித்யா பாடிய பந்துவராளி ராகத்தில் விஸ்தரிப்புக்களில் நிறைய மின்னல், அதிரடி சங்கதிகள் இருந்தன. வேகமும் சற்றே அதிகம். நிகழ்ச்சியில் இந்தோலிராகமும், தொடர்ந்து ஸ்ரீ தீட்சிதருடைய நீரஜாட்சி காமாட்சியும் மனம் கவர்ந்தன. பிரதான சங்கராபரண ராகம் நல்ல உழைப்புடன் விஸ்தாரமாக இருந்தது. இசை மழலை வித்யா கல்யாணராமனின் வயலின் வாசிப்பு நயமான, இடையூறு செய்யாத கச்சிதமான வாசிப்பு. என்.சி.பரத்வாஜ் மிருதங்கம் நல்ல ஒத்துழைப்பு - சிறப்பான வாசிப்பு. இந்த இசை நிகழ்ச்சிகளைக் கேட்டபோது கர்நாடக இசையின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டதில் வியப்பில்லை. -மாளவிகா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக