மாலை மலர் : அரசு பள்ளிகளில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர மாதம்தோறும் ரூ.1000 உதவி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
ஏழை மாணவிகள் பள்ளியோடு படிப்பை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
தமிழக அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து இந்தத் திட்டத்தில் லட்சக்கணக்கான மாணவிகள் விண்ணப்பித்துள்ளனர்.
இதில் விண்ணப்பிக்கும் அவகாசம் கடந்த மாதம் 18-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், மாணவிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதம்தோறும் 7-ம் தேதி முதல் வங்கிக்கணக்கல் மாதந்தோறும் வரவு வைக்கப்படும். இதற்காக அரசு ரூ. 698 கோடி நிதி ஒதுக்கியுள்ளது என தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக