வெள்ளி, 12 ஆகஸ்ட், 2022

லோக்சபா தேர்தல் இப்போது நடந்தால் பாஜகவுக்கு பின்னடைவு-- பீகார் திருப்பத்தால் ! -இந்தியா டுடே கணிப்பு

Mathivanan Maran  -   Oneindia Tamil :  டெல்லி: பீகார் ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர் லோக்சபா தேர்தல் இப்போது நடைபெற்றால் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி தடுமாற்றத்தை எதிர்கொள்ளும் என்கிறது இந்தியா டுடே- சி வோட்டர் கருத்து கணிப்பு.
பீகாரில் பாஜகவுடனான கூட்டணியை ஜேடியூ முறித்துக் கொண்டது. மேலும் பாஜகவுக்கு எதிரான காங்கிரஸ்-ஆர்ஜேடி-இடதுசாரிகளுடன் இணைந்து ஜேடியூ தலைமையில் புதிய ஆட்சியை அமைத்துள்ளார் நிதிஷ்குமார்.
பொதுவாக மாநிலங்களில் பாஜகதான் ஆட்சியை கவிழ்ப்பது; கட்சியை உடைப்பது என்கிற சர்ச்சையில் சிக்கும். ஆனால் பீகாரில் பாஜக எந்த வகையிலும் எழுந்துவிடாதபடி ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு நிற்கின்றன. இது தேசிய அளவில் எதிர்க்கட்சிகளுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கிறது.


பீகாரில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை 2024 லோக்சபா தேர்தலிலும் எதிரொலிக்க வேண்டும் என விரும்புகின்றன எதிர்க்கட்சிகள். அதனால் திமுக தலைவரான தமிழக முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சியின் அகிலேஷ் யாதவ் என பல தலைவர்களும் இந்த மாற்றத்தை வரவேற்கின்றனர்.

இந்நிலையில் லோக்சபா தேர்தல் இப்போது நடைபெற்றால் என்ன மாதிரியான முடிவுகள் வரும் என இந்தியா டுடே - சிவோட்டர் கருத்து கணிப்பு வெளியிட்டது.

பீகார் அரசியல் மாற்றங்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 1 வரையிலான களநிலவரப்படி இந்தியா டுடே- சிவோட்டர் மேற்கொண்ட லோக்சபா தேர்தல் இப்போது நடைபெற்றால் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற கருத்து கணிப்பின் முடிவுகள்:

காங். கூட்டணி : 125

ஆனால் பீகார் அரசியல் மாற்றத்துக்கு பின்னர் தற்போது தேர்தல் நடைபெற்றால் கிடைக்கும் இடங்கள்:

காங். கூட்டணி : 146

பீகார் மாற்றத்துக்குப் பின்னர் பாஜக அணிக்கு 21 இடங்கள் குறைந்திருப்பதாக சுட்டிக்காட்டுகிறது இந்தியா டுடே- சிவோட்டர் கருத்து கணிப்பு. கடந்த பிப்ரவரி மாதம், ஆகஸ்ட் மாதம் இடையே மொத்தம் 1,22,016 பேரிடம் இந்த கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை: