கலைஞர் செய்திகள் : ஆசிய கடற்கரை போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்த முயற்சிகள் நடக்கப்பட்டு வருகிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியை ஜூலை 28ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார். இந்த பிரம்மாண்ட தொடக்க விழாவை அடைத்து மாமல்லபுரத்தில் போட்டிகள் நடைபெற்றது.
இதையடுத்து இன்று செஸ் ஒலிம்யாட் போட்டியின் நிறைவு விழா கலை நிகழ்வுகளுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-
செஸ் என்பது விளையாட்டுப் போட்டியாக மட்டுமல்லாமல் - விளையாட்டு விழாவாக மட்டுமல்லாமல் - இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய பண்பாட்டுத் திருவிழாவைப் போல் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - என்று இதன் தொடக்கவிழாவில் நான் குறிப்பிட்டேன். அத்தகைய பண்பாட்டுத் திருவிழாவில் கலந்து கொள்ள வருகை தந்த செஸ் விளையாட்டு வீரர்கள் - பயிற்சியாளர்கள், ஆர்வலர்கள் அனைவர்க்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்தவிளையாட்டு வீரர்கள் மற்றும் ஒலிம்பிக்பதக்கங்கள் வெல்வோரை உருவாக்கும் பொருட்டு‘ஒலிம்பிக் தங்க வேட்டை’ என்ற திட்டம் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் நடைமுறைப்படுத்தப்படஉள்ளது.
பன்னாட்டு மற்றும் மாநில அளவில் பதக்கங்கள்வென்று நாட்டிற்கும் மற்றும் மாநிலத்திற்கும்பெருமை தேடித் தரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவிளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளைஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு உயரியஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில், கடந்த ஓராண்டில் 1073 விளையாட்டுவீரர்களுக்கு மொத்தம் ரூ.26.85 கோடி உயரியஊக்கத் தொகை வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்திற்கு Global Sporting Destination என்கிற பட்டத்தை பெற்றுத்தர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த திராவிட மாடல் அரசு முன்னெடுக்க உள்ளோம்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் – வீராங்கனைகளுக்கு, பன்னாட்டு பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சியளிக்கப்பட உள்ளது.
வட சென்னையிலும், கோபாலபுரத்திலும் குத்துச்சண்டை அகாடமிகள் நிறுவப்பட உள்ளன.
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு எனப்படும் “ஏறுதழுவுதலுக்கு” பிரம்மாண்டமாக தனி விளையாட்டுக் களம் விரைவில் அமைக்கப்பட உள்ளது.
அனைத்து விளையாட்டுகளையும் ஊக்கப்படுத்தும் வகையில் இந்த அரசு, நம்முடைய தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது.
I am glad to share that We are taking steps to host ‘Chennai Open’ WTA International Championship and also Asian Beach Games in Tamil Nadu.
(சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரையும், ஆசிய கடற்கரை விளையாட்டுப் போட்டிகளையும் சென்னையில் நடத்தவும் நாங்கள் முனைப்போடு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் என்பதையும் உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.)
We will continue our efforts in making Tamil Nadu, a global destination for sports.
(தமிழ்நாட்டை உலகளாவிய விளையாட்டு மையமாக உயர்த்துவதற்கு நாங்கள் தொடர்ந்து முயல்வோம்.)
மேலும், நமது மண்ணின் விளையாட்டுகளை உலக அரங்குக்குக் கொண்டு செல்வதிலும் கவனம் செலுத்தி வருகிறோம் தொடக்க விழாவில் உங்கள் அனைவரின் முன்பும் நிகழ்த்திக் காட்டப்பட்ட சிலம்பாட்டத்துக்கு தேசிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தரவும் முயன்று வருகிறோம்.
தமிழ்நாடு அரசு எடுத்துவரும் முயற்சிகளின் காரணமாக சிலம்பாட்டத்தில் ஒளிரும் வீரர்களுக்கு மற்ற விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படுவதைப் போல பரிசுத் தொகைகளும் - தமிழ்நாட்டின் கல்வி நிறுவனங்கள் மற்றும் பணிவாய்ப்புகளில் இட ஒதுக்கீடும் வழங்கப்பட்டிருக்கிறது." என தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக