செவ்வாய், 9 ஆகஸ்ட், 2022

அமெரிக்காவில் பஞ்சாப் பெண் தற்கொலை . கணவன் பணம் கேட்டு கொடுமை .. வீடியோவில் பேசி விட்டு தற்கொலை

 Ezhumalai Venkatesan  : வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை..
மன்தீப் கவுர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகருக்கு வாழ்க்கைப்பட்டு போனார்.
கொஞ்ச நாளிலேயே வரதட்சணை கொடுமை ஆரம்பமானது. கணவன் சாந்துவிடம் இருந்து  தினமும் அடி உதை .
இது போதாது என்று ஏராளமான பெண்களுடன் வேறு சாந்துவுக்கு சகவாசம்..
இரு மகள்கள் பிறந்து 4 வயது 6 வயது ஆன பிறகும், மனைவியை கணவன் கொடுமைப்படுத்துவது மட்டும் நிற்கவே இல்லை.
விரக்தியின் உச்ச கட்டத்திற்கு சென்ற மான்தீப் கவுர், கணவன் குடும்பத்தார் செய்த கொடுமைகள் எல்லாம் அழுதபடியே பட்டியலிட்டு வீடியோவாக வெளியிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டார்.


மான்தீப் வீடியோ அமெரிக்கா வாழ் இந்தியர்களை கடுமையாக உலுக்க ஆரம்பித்துள்ளது. தற்கொலை செய்துகொண்ட பெண்களுக்கு நீதி கிடைக்கும் வகையில் கணவன் மற்றும் அவரது குடும்பத்தாரை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று குரல் கொடுக்கின்றனர்.
இந்திய பெண் என்றால் சொர்க்கபுரியாக அமெரிக்காவுக்கே சென்றாலும், வரதட்சணை கொடுமை மட்டும் விடவே விடாது போல.

கருத்துகள் இல்லை: