ராதா மனோகர் : கலைஞர் திராவிட முன்னேற்ற கழகம் என்ற ஒரு அரசியல் கட்சிக்கு மட்டுமே சொந்தமானவர் என்பதல்ல.
இன்னும் சரியாக சொல்லப்போனால்,
கலைஞரின் சமூக அரசியல் கோட்பாட்டை புரிந்து அதன் வழி நடக்க முயலும் அத்தனை பேர்களுக்கும் அவர் சொந்தமானவர்தான்
கலைஞர் என்ற சுயமரியாதை சகாப்தத்தை வெறும் தேர்தல் அரசியலுக்குள் குறுக்கி விடமுடியாது
ஒரு முதல்வர் - ஒரு கட்சியின் தலைவர் என்ற படிநிலைகளை தாண்டி இன்று முழு தெற்கு ஆசியாவுக்கும் தேவையுள்ள கோட்பாட்டு மனிதராக கலைஞர் நிற்கிறார்
இனி வரும் காலங்களில் இந்திய ஒன்றியம் எங்கிலும் கலைஞர் கலைஞர் கலைஞர் என்ற பெயர் ஒலிக்கப்படும்!
இன்னும் சரியாக தெளிவாக சொல்வதாயின்,
தென்னக மாநிலங்கள் தோறும் சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு கருத்துக்களின் தேவை தற்போது பெரிய அளவில் உணரப்படுகிறது
எதிர்முகாம்களில் இருக்கும் பலரும் கூட கலைஞரின் பெயரை உச்சரிக்க தொடங்கி இருக்கிறார்கள்
கலைஞர் என்ற அடையாளம் தமிழ்நாட்டை தாண்டி விரிந்து கொண்டே இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கும் எல்லா அரசியல் கட்சிகளும் எல்லா சமூக அமைப்புக்களும் கலைஞரை பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்லவேண்டும்
இங்கே கலைஞர் என்று நான் குறிப்பிடுவது சுயமரியாதையை சமூகநீதியை பகுத்தறிவை ...
குறிப்பாக அதிமுக போன்ற கட்சிகள் தங்களின் கடந்து வந்த பாதைகளை சற்று பின்னோக்கி பார்த்து சரிசெய்ய வேண்டிய காலம் இது.
தமிழ்நாட்டின் பெரும்பான்மையான கட்சியினர் கொள்கையளவில் கலைஞரின் பாதையில் பயணிக்க முனைபவர்கள்தான்
கலைஞர் என்பவர் உங்களுக்கும் சொந்தமானவர்தான்!
தேர்தல் அரசியல் என்ற விளையாட்டில் கலைஞர் என்ற விளக்கை பறிகொடுத்து விடாதீர்கள்.
அடுத்தடுத்து வரும் தலைமுறைகளுக்கு கலைஞர் என்ற கலங்கரை விளக்கம் ஒளி பாய்ச்ச வேண்டும்.
அந்த ஒளியின் உண்மை பெயர்தான் சுயமரியாதை சமூகநீதி பகுத்தறிவு!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக