நடந்தது உலக செஸ் போட்டிகள் .. தமிழ்நாட்டின் பாரம்பரிய நாதஸ்வர இசை இடம்பெறாமை மனதை உறுத்துகிறது லிடியன் பியானோ இசை பற்றி மாற்று கருத்து இல்லை .
ஆனால் அவர் கண்ணை கட்டிக்கொண்டு வாசித்தார் என்பது கூட சரிதான்
ஆனால் அவருக்கு அதிக நேரம் ஒதுக்கி......
இந்நிகழ்வு ஏதோ உலகபியானோ விழா அல்லது உலக லிடியான் விழா அல்லவே
நாதஸ்வரம் நிச்சயமாக பல்நாட்டினரால் மிக உற்சாகத்தோடு வரவேற்க பட்டிருக்கும்
பியானோவில் அதுவும் கிளாசிக்கல் உருப்படிகளை வாசிப்பது என்பது மேலை நாடுகளில் கூட எலீட்டுக்களின் இசை என்ற பொதுக்கருத்து இருக்கிறது
சாதாரண மக்களின் இசையாக அந்நிகழ்ச்சி இருக்கவில்லை
நாதஸ்வரம் மறுக்கப்பட்டது ஏன்?
சியாமா, தியாகராஜர் மற்றும் முத்துசாமி போன்ற சங்கீத மும்மூர்த்திகள் இசை கற்றதே நாதஸ்வர வித்வான்களிடம் இருந்துதான்
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தமிழிசை பண்களையும் ராகங்களை பேணி பாதுகாத்து உலகிற்கு அளித்தவர்கள் நாதஸ்வர கலைஞர்கள்
இந்த வரலாற்று உண்மையை திட்டமிட்டு பார்ப்பனீயம் அழித்து வருகிறது
கர்நாடக சங்கீதத்தின் பிதா மகர்கள் நாதஸ்வர வித்துவான்கள்தான்
இந்த உண்மையை இருட்டடிப்பு செய்யவே சங்கீத முமூர்த்திகள் என்று மூன்று பார்ப்பனர்களை ஓவராக பில்டப் செய்கிறார்கள்
இந்த பின்னணியில்தான் சென்னை செஸ் விழாவில் நாதஸ்வர இசை புறக்கணிக்கப்பட்டிருக்கிறது என்று கருதுகிறேன்
இதை பற்றி யாரவது கேள்வி எழுப்பி விடக்கூடாது என்பதால்தான் லிடியான் நாதஸ்வரம் என்ற இளைஞருக்கு அளவுக்கு மீறி நேரத்தை கொடுத்து அவரது வித்தைகளை காட்டும் மேடையாக இந்த அற்புதமான நிகழ்வை பயன்படுத்தி இருக்கிறார்கள்
நாதஸ்வர கலையை புறக்கணித்து நாதஸ்வரம் என்ற பெயர் கொண்ட தமிழ் இளைஞரை முன்னே நிறுத்தி தங்கள் கைங்கரியத்தை காட்டி உள்ளார்கள்
சிகண்டியை முன்னிறுத்தி கௌரவர்களை தோற்கடித்த கதையை கொஞ்சம் படியுங்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக