மாலைமலர் : எர்ணாகுளத்தை அடுத்து உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலாவும், பாத்திமாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.
கேரள ஐகோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் உறவினர்கள் யாரும் எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
கேரளாவில் நிஜத்தில் ஒன்று... நிழலில் ஒன்று என 2 லெஸ்பியன் ஜோடிகள் அம்மாநிலத்தையே அதிரவைத்துக் கொண்டிருக்கின்றனர்.
அப்படி என்னதான் நடந்துள்ளது? வாழ்க்கையில் லெஸ்பியன் ஜோடி சேர்ந்து வாழ எந்த தடையும் இல்லை என்று கேரள கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ள நிலையில் அந்த பரபரப்பு அடங்கும் முன்னரே லெஸ்பியன் சினிமா ஒன்றின் முன்னோட்ட காட்சிகள் வெளியாகி மூச்சு முட்ட வைத்துள்ளன.
கன்னியாஸ் திரி வேடத்தில் இருக்கும் பெண் ஒருவர் தனது தோழி யுடன் உதட்டோடு உதடு சேர்த்து லிப்கிஸ் அடிக்கும் காட்சி கேரளா முழுக்க கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
முதலில் நிஜ லெஸ்பியன் ஜோடி ஏற்படுத்திய பரபரப்பை பார்க்கலாம்.
எர்ணாகுளத்தை அடுத்து உள்ள ஆலுவா பகுதியை சேர்ந்த ஆதிலாவும், பாத்திமாவும் சிறுவயதில் இருந்தே நெருங்கிய தோழிகள்.
இருவரும் சவுதியில் படித்தபோது ஏற்பட்ட பழக்கம் காதலாகி இருக்கிறது.
இதனால் நீ இல்லை என்றால் நான் இல்லை. நான் இல்லை என்றால் நீ இல்லை என்ற ரீதியில் 2 பேரும் ஒன்றாக இருக்க தொடங்கினர்.
இருவருக்கிடையே லெஸ்பியன் உறவு ஏற்பட்டுள்ளது. இதனால் கொந்தளித்த குடும்பத்தினர் இருவரையும் பிரித்தனர்.
பாத்திமாவை சவுதியில் இருந்து கேரளாவுக்கு அழைத்து வந்து விட்டனர்.
இதனால் செய்வதறியாது தவித்த ஆதிலா, கேரளாவுக்கு வந்து பாத்திமாவை கண்டுபிடித்து விட்டார்.
இதன் பின்னர் இருவரும் ஒன்றாக வாழ தொடங்கினர். ஆனால் பாத்திமாவின் குடும்பத்தினர் விடவில்லை. பாத்திமாவை, ஆதிலாவிடம் இருந்து மீண்டும் பிரித்து சென்று விட்டனர்.
இதனால் கோபத்தின் உச்சத்திற்கே சென்ற ஆதிலா கேரளா ஐகோர்ட்டை நாடினார். நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ ஆசைப்படுகிறோம். ஆனால் உறவினர்கள் அதற்கு தடையாக உள்ளனர். எங்களை சேர்ந்து வாழ அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதனை ஏற்றுக்கொண்ட கேரள ஐகோர்ட்டு இருவரும் சேர்ந்து வாழலாம் என்றும் உறவினர்கள் யாரும் எந்த விதத்திலும் இடையூறு செய்யக்கூடாது என்றும் அதிரடி தீர்ப்பை வழங்கியது.
இதனை மலையாள தேசத்தில் உள்ள லெஸ்பியன் ஆதரவாளர்கள் உச்சிமுகர்ந்து கொண்டாடி வருகிறார்கள். இந்த தீர்ப்பு வந்து சில நாட்களே ஆன நிலையில் சினிமா மூலமாக இன்னொரு லெஸ்பியன் ஜோடி புதிய புயலை கிளப்பி உள்ளது.
'ஹோலி வூண்ட்' (புனித காயம்) என்ற பெயரில் கேரள மாநிலத்தில் தயாரிக்கப்பட்டு உள்ள படத்தில் டிரைலர் வெளியாகி அம்மாநில இளைஞர்கள் மத்தியில் படம் எப்போது வரும்? என்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டிரைலரில் 2 பெண்கள் காமதாகத்தில் தவிப்பதுபோல படுசூடாக காட்சிகள் இடம் பெற்றுள்ளன.
தண்ணீர் சூழ்ந்துள்ள பகுதியில் டிரைலர் படமாக்கப்பட்டிருக்கும் விதமும்,
கன்னியாஸ்திரி வேடத்தில் இருக்கும் பெண், இன்னொரு பெண்ணின் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது போலவும் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.
என்னடா இது கேரளாவுக்கு வந்த சோதனை? என்று கூறிக்கொண்டு சமூக ஆர்வலர்கள் கண்டனக்குரலுடன் களம் இறங்கியுள்ளனர். கிறிஸ்தவர்கள் மத்தியில் இந்த படத்தின் டிரைலர் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
டைரக்டர் அசோக் ஆர்.நாத் இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் ஜானகி சுதீர், அம்ருதா வினோத் இருவரும் லெஸ்பியன் தோழிகள் தோற்றத்தில் நடித்துள்ளனர்.
டிரைலரே இப்படி சூட்டை கிளப்பியுள்ள நிலையில் முழு படமும் எப்படி இருக்க போகிறதோ? என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
அதற்கேற்ப எக்கச்சக்க எதிர்ப்புகளும் ஏற்பட்டுள்ளது. ஆனால் பழைய நெருங்கிய தோழிகள் மீண்டும் சந்தித்துக் கொள்ளும்போது உணர்ச்சி பிரவாகம் தான் இது என்று சினிமா குழுவினர் தெரிவித்து உள்ளனர்.
லெஸ்பியன் உணர்வு கொண்டவர்களும், தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்களும், மனிதர்கள் தான். அவர்கள் பற்றி வேறு விதமாக சிந்திக்க கூடாது என்பதை படம் உணர்த்துகிறது என்று சினிமா குழுவினர் கூறி இருக்கிறார்கள்.
அடுத்தடுத்து இப்படி கேரளாவில் அனல் பறக்கும் விவகாரங்கள் அரங்கேறிக் கொண்டிருக்கும் சூழலில் இளம் ரசிகர்களோ 'ஹோலி வூண்ட்' படத்தை காண ஆர்வமாக உள்ளனர். ஓ.டி.டி. தளத்தில் இந்த படம் வருகிற 12-ந் தேதி வெளியாக உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக