சுமதி விஜயகுமார் : · ஆஸ்திரேலியாவில் இந்திய பெயர் ஒன்று மிக
பிரபலம். மோடி இல்லை. இந்தியாவில் தான் கல்யாணம் ,காது குத்து என துவங்கி தேர்தல் வரை பெரிய பெரிய பேனர்கள் வைக்கப்படும். ஆஸ்திரேலியாவில் எவ்வளவு பெரிய தேர்தல் என்றாலும் முட்டிக்கால் அளவிற்கு ஒரு குச்சியில் வேட்பாளர் படமும் அவரின் பெயர் மற்றும் கட்சியின் பெயர் இருக்கும், அவ்வளவு தான். ஆனால் ஒரு இந்திய பெயர் தாங்கிய மிக சிறிய போஸ்டர் ஒன்று ஆஸ்திரேலியாவின் தலைநகராகிய கான்பராவில் ஒட்டப்பட்டிருக்கிறது.வெறும் பெயர் மட்டும் சொன்னால் பல ஆஸ்திரேலியர்களுக்கு தெரியாது. ஒரு இயக்கத்திற்கே அவரின் பெயர் தான் . STOP ADANI. 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் பிரபல தொலைக்காட்சியான SBS இந்தியாவில் ஒரு String operation நிகழ்த்தினார்கள். குஜராத்தில் அதானி குழுமம் எப்படி ஒரு துறைமுகத்தையே வளைத்து சொந்தம் கொண்டாடி அதை நிர்மூலம் ஆக்கியதென்று. அதோடு மட்டும் நிற்காமல் அதானி குழுமத்திற்கு அந்த அனுமதியை இந்திய அரசு எப்படி கொடுத்தது என்றும் ஆராய துவங்கினார்கள். 2 நாட்கள் தான். இரண்டாம் நாள் இரவு SBS நிருபரும், ஒளிப்பதிவாளரும் (இருவரும் ஆஸ்திரேலியர்கள்) நடு இரவு மிரட்டப்பட்டு இரவோடு இரவாக ஆஸ்திரேலியாவிற்கு துரத்தப்பட்டார்கள். மிரட்டியவர் ஒரு காவல்துறை அதிகாரி. அதுவரை காட்சிப்படுத்தியதையும் , தாங்கள் மிரட்டப்பட்டு துரத்தப்பட்டதையும் தொகுத்து நிகழ்ச்சியாக வழங்கினார்கள்.
ஒரு ஆஸ்திரேலியா தொலைக்காட்சி எதற்காக இந்திய அதானியை பற்றி ஆராய வேண்டும்?
ஆஸ்திரேலியாவில் opera house, harbour bridge க்கு அடுத்து மிக பிரபலம்
The Great Barrier Reef . மிக அதிக அளவிலான பவள பாறைகள் கொண்ட இடம். நமக்கு
புரியும் படி சொல்ல வேண்டுமானால் இலங்கைக்கு ராமர் கட்டிய பாலம் போல பல
மடங்கு பெரியது. இது உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பாரம்பரியமிக்க இடத்திற்கு அதானியால் ஆபத்து வந்திருக்கிறது.
Carmichael Mine & Rail Project திட்டத்திற்கு ஆஸ்திரேலியா அரசு அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியது.இது Queensland மாநிலத்தில் அமையவுள்ள நிலக்கரி சுரங்கம் . இதன் மூலம் 10,000 ஆஸ்திரேலியர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று அதானி குழுமம் சொன்னது. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு அனுமதி வழங்க பட்டவுடன் அதானி குழுமம் தங்கள் வலைப்பக்கத்தில் , இந்த திட்டம் மூலம் 1500 வேலைகள் வரை உருவாகும் என்று சொல்லி இருக்கிறது. இந்த திட்டத்தை எதிர்ப்பவர்கள் அந்த 1500 வேலைகள் கூட நில சுரங்கம் துவங்கும் வரை தான் பின்னர் வெறும் 100 ஆட்களுக்கு மட்டுமே வேலை இருக்கும் என்கிறார்கள்.
தங்களில் வெறும் 100 பேருக்கு மட்டும் வேலை கொடுக்கும் திட்டத்திற்காக அந்த அப்பகுதி மக்கள் இழக்க போவது என்னென்ன? உலக அளவில் உள்ள பெரிய நிராகரி சுரங்களில் ஒன்றாக இது இருக்க போகிறது. 60 ஆண்டுகளுக்கு எந்த தடையுமின்றி அதானி குழுமம் நிலத்தடி நீரை உறிஞ்சி கொள்ளலாம். ஆஸ்திரேலியாவில் இப்போது உள்ள கார்பன் வெளியேற்றத்தை விட மிக அதிக அளவில் இருக்கும். Great Artesian Basin நீரை உறிஞ்சி 28,000 கால்பந்து மைதான அளவு நிலத்தை சீர்குலைக்கும். இந்த Great Artesian Basin தான் ஆஸ்திரேலியா நீரின் தேவையை 22% பூர்த்தி செய்கிறது.பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரத்தை நிர்மூலம் ஆக்கும்.
அதனால் நமக்கென்ன இது ஆஸ்திரேலியா பிரச்சனை என்று கருதுபவர்கள் கவனத்திற்கு, ஒரு வருடத்திற்கு 10 மில்லியன் டன் வரை நிலக்கரி ஏற்றுமதி ஆகும் என்று கணிக்கப்படுகிறது. அது அனைத்தும் எங்கு போகப்போகிறது என்றால் வளர்ச்சி நாயகன் மோடியின் தேசத்திற்கு. இதனால் நன்மைதானே என்று கருதினால் Coal India Limited (CIL) பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம். இது ஒரு அரசு நிறுவனம். இந்த நிறுவனத்திற்கு தான் அதானி குழுமம் ஆஸ்திரேலியா நிலக்கரியை அதிக விலைக்கு விற்க போகிறது. இந்த நிறுவனம் நேரடியாக ஆஸ்திரேலியா நிறுவனத்திடம் வாங்குவதை விட கூடுதல் விலைக்கு அதானி குழுமம் விற்க போகிறது. அதாவது நம் வரிப்பணம் விரயம் ஆக போகிறது. அதோடு மட்டுமில்லாமல் வருடத்திற்கு 10 மில்லியன் டன் நிலக்கரி இறக்குமதி மற்றும் உபயோகத்தால் சுமார் ஒரு லட்சம் இந்தியர்கள் சுவாச பிரச்சனை காரணமாக இறக்க நேரிடும் என்றும் கணக்கிட பட்டிருக்கிறது.
இதை எல்லாம் தடுக்கவே ஆஸ்திரேலிய சமூக செயல்பாட்டாளர்கள் தொடர்ந்து குரல் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். இவர்கள் கொடுத்த அழுத்தத்தினால் ஆஸ்திரேலியாவின் மிக பெரிய 4 வங்கிகளும், ஏறக்குறைய 55 பன்னாட்டு நிதிநிறுவனங்களும் அதானி குழுமத்திற்கு நிதி கொடுக்க மறுத்திருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அதானி குழுமம் செய்த அத்தனை குற்றங்களையும் ஆராய்ந்து அறிக்கைகள் வெளியிட்டு கொண்டே இருக்கிறார்கள்.
வாய்ப்பிருப்பவர்கள் Stop Adani என்று தேடினால் தகவல்கள் அருவிபோல் கொட்டும். SBS வலைத்தளத்திலும் தேடலாம். வாய்ப்பு இல்லாதவர்கள் ஜெய் ஸ்ரீராம் சொல்லலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக