ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2020

இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த மாநிலங்களின் கதி ... ஆய்வு கட்டுரை

Sergio Marquina : · இந்தி கற்றிருந்தால் நமது மாநிலம் இன்னும்
முன்னேறியிருக்கும் இந்தி கற்கவிடாமல் நம் மாநிலத்தை பின்தங்கவைத்துவிட்டார்கள் என்கிற நண்பர்களே...! இந்தியாவிலேயே முதன்முதலாக இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த பீஹாரின் நிலையை பாருங்களேன் பீஹாரின் தாய்மொழி போஜ்புரி மற்றும் மைத்திலி. உத்திரப்பிரதேசமும் இந்தியை ஆட்சி மொழியாக அறிவித்த ஒரு மாநிலம்தான் அதன் முன்னேற்றத்தையும் நண்பர்கள் ஆய்வு செய்துகொள்ளுங்கள் வடமேற்கு உ.பியின் தாய்மொழி பிரஜ் பாஷா, தென்மேற்கு உ.பியின் தாய்மொழி புந்தேல்கண்டி வடகிழக்கு உ.பி யின் தாய்மொழி போஜ்புரி,பிரதாப்கர் போன்ற மத்திய உ.பி யில் பேசப்படுவது ஆவ்தி,பிறகு கன்னோஜி என்கிற மொழியும் பேசப்படுகிறது அடுத்ததாக உத்தராகண்ட் மாநிலத்தின் ஆட்சிமொழியும் ஹிந்திதான் போதாதற்கு சமஸ்கிருதம் additional அலுவலக மொழி.ஆனால் உத்ராகண்டின் உண்மையான தாய்மொழி கடுவாலி மற்றும் குமோனி.

அடுத்து ஹரியானா மாநிலத்தின் அலுவலக மொழியும் இந்திதான் ஆனால் தாய்மொழி ஹரியாணி

ராஜஸ்தானில் ஆட்சி மொழி ஹிந்தி ஆனால் தாய்மொழி கள் ராஜஸ்தானி,மார்வாரி,மேவாரி,

மத்யபிரதேசத்தின் ஆட்சி மொழி இந்தி ஆனால் தாய்மொழிகள் உருது,மால்வி,நிமதி,அவதி,பகேலி

காஷ்மீரின் தாய்மொழி காஷ்மிரி மற்றும் உருது, ஜம்முவின் தாய்மொழி டோக்ரி,பாடி, லடாக்கின் மொழி லடாக்கி,ஆட்சிமொழியாக இந்தி சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது

சட்டீஸ்கரில் தாய்மொழி சட்டீஸ்கரி,கோர்பா, ஆனால் ஆட்சிமொழியாக ஹிந்தி,

ஜார்கன்டில் தாய்மொழி ஜார்கன்ஷி,சந்த்தலி
ஆட்சி மொழி இந்தி

மேற்கூறிய மாநிலங்களில் அவர்களின் தாய்மொழியில் இலக்கியங்களோ படைப்புக்களோ வருவதில்லை வரிவடிவமற்ற வெறும் பேச்சு மொழிகளாக அவை சுருங்கிவிட்டன

இந்தி மொழி வந்து ஆளுமை பெற்றதால் உண்மையான தாய் மொழிகள் எந்த ஒரு வளர்ச்சியும் இல்லாமல் அழியும் நிலையை எட்டிவிட்டன ஏனென்றால் தாய்மொழி அவர்களுக்கு அவசியமற்றதாகிவிட்டது அவர்கள் தாய்மொழியில் படித்தால் அவர்கள் ஊரிலேயே வேலை கிடைக்காது என்பதால் தாய்மொழி வெறும் வாய்மொழியாக கற்பிக்கப்படுவதோடு சரி கல்விநிலையங்களில் கற்பிக்கப்படுவதில்லை.

சரி மேற்கூறிய மாநிலங்களில் இந்தியை ஆட்சி மொழியாக ஏற்றுக்கொண்டதால் பொருளாதார வளர்ச்சி கிடைத்துவிட்டதா என்றால் இல்லை தாய்மொழியை ஆட்சி மொழியாகக்கொண்ட தமிழகத்தைவிட பின்தங்கியே உள்ளன. சரி கல்வியளிப்பதிலாவது வளர்சியடைந்துள்ளதா என்றால் அதிலும் தமிழகத்தைவிட பலமடங்கு பின்தங்கியே உள்ளன

பிறகெதற்கு நம்மீது மும்மொழிக் கொள்கை என்று இந்தியைத் திணிக்கிறார்கள் என்றால் இந்தி பேசும் மாநிலத்தினருக்கு தமிழ்நாட்டில் வேலைவாய்ப்பைப் பெறுவதும்,தொழில் மேற்கொள்வதும் ஏன் தேர்தல் பிரச்சாரம் செய்வதும்கூட எளிமையாக இருக்கவேண்டுமல்லவா

நான் உன்னோடு தொடர்புகொள்ள எனக்குச் சிரமமாக இருக்கிறது அதனால் நீ என் மொழியை கற்றுக்கொள் என்பது எவ் வளவு திமிரான சர்வாதிகாரம் அந்தச் சர்வாதிகாரம்தான் நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கிறது புதிய. கல்விக் கொள்கை வாயிலாக

ஆங்கிலமும் உலகப் பொதுமொழி அல்ல உண்மைதான்
உலகின் பொதுமொழி technologyதான் ஆனால்
உலகத்தின் பொது அறிவு,மருத்துவம், விஞ்ஞானம்,வரலாறு அனைத்தும் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன,அதனால் ஆங்கிலம் கற்பது அவசியமாகிறது.

ஆனால்
இந்தியில் அப்படி எந்த ஒரு அறிவுப் பொக்கிஷமோ,இலக்கியச் செழுமையோ, வரலாற்று பின்னணியோ இல்லை
இந்தி படிப்பது பானிப்பூரிக் காரர்களிடம் பேசிக்கொள்ளமட்டுமே பயன்படலாம்

என் நண்பன் ஒருவனுக்கு சீனத்தில் சில ஆண்டுகள் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது
அவன் சீனமொழி தெரிந்தவனுமல்ல
ஆனால் அவன் ஒரு software engineer

அவனிடம் technology இருந்ததால் சீனமும் அவனை ஆரத் தழுவி வரவேற்றது
வெறும் மொழியை மட்டும் தெரிந்திருந்தால் அவனால் தமிழக எல்லையைக்கூட தாண்டியிருக்க முடியாது.
எனவே தொழில்தான் நமது சர்வதேச மொழி ஒரு மருத்துவர் எந்த நாட்டுக்குப் போனாலும் மருத்துவராக வேலை செய்யலாம்
ஒரு பொறியாளர் எந்த நாட்டுக்குப் போனாலும் பொறியாளராக வேலை செய்யலாம்
ஏன் ஒரு கொத்தனாரும் கூட எந்த நாட்டுக்கும் சென்று கொத்தனாராக வேலை செய்யமுடியும்

ஆனால் ஒரு மொழியைப் படித்து அதில் பட்டம் பெற்றால் அந்த மொழி உள்ள தேசத்தில் மட்டுமே பணிபுரியமுடியும்
அதுவும் இந்தியில் படித்து வட இந்தியாவுக்கு வாத்தியார் வேலைக்குச் சென்றால் அங்கே நம்மைவிட திறமையான பிறப்பிலிருந்தே இந்திபேசும் பண்டிட் காத்திருப்பான் நமக்குப் போட்டியாக...

இந்தி படித்தால் இந்தியாவெங்கும் வேலை கிடைக்குமென்றால் இந்தி படித்த பானிப்பூரிக்காரனுக்கு ஏன் கிடைக்கவில்லை,

அந்நிய மொழியை கற்பதை பெரிய சுமையாக
யார் உணர்ந்தீங்களோ இல்லையோ
நான் உணர்ந்திருக்கேன்

நான் படிக்கும்போது இந்த இங்கிலீஸ எவன்டா கண்டுபிடிச்சான் அதை படிக்கவச்சு நம்மள தொல்லை பண்றாய்ங்க'னு நெனைச்சிருக்கேன்

பணிரெண்டாவது வரை ஆங்கிலத்தை ஒரு பாடமாக படிச்சிருந்தாலும் இன்னும் இங்கிலீஸ்ல ஒரு sentence கூட திக்காமல் திணறாமல் பேசத் தெரியாது

தமிழ்லயே படிச்சிட்டு
CRPFல தேர்வாகி Training போயி வெறும் மூணே மாசத்துல ஹிந்தி பேச கத்துக்கிட்டோம்

ஏன் என்றால் தேவையாக இருந்தது தேவை கண்டுபிடிப்பின் தாய் மட்டுமல்ல
தேவைதான் கற்றலுக்கும் தாய்.

அதேசமயம் என்னோடு பனிரெண்டாம் வகுப்பில் படித்த 90%நண்பர்கள் இங்கே லோகல்லதான் தொழில் செய்கிறார்கள் அல்லது வேலை பார்க்கிறார்கள்.அவர்கள் எவருக்கும் ஹிந்திக்கான தேவை ஏற்படவில்லை.

பள்ளியில் ஹிந்தி கற்றிருந்தாலும் அவர்களுக்கு பிரயோசனம் இல்லை

விரும்பிக் கற்றால் இந்தியோ வேற்று மொழியோ கற்க
மூன்றுமாத spoken class கோர்ஸ் போதுமானது.
நமது பிள்ளைகளை இளமையிலேயே இந்தி படிக்கச் சொல்வது அவர்களுக்கு அது தேவையற்ற சுமைதான்.
தேவையில்லாம அதை ஒரு subject டா வச்சு அதுக்கொரு தேர்வு வச்சு அதுக்கொரு 😳வீட்டுப்பாடம்னு வச்சு பிள்ளைகள உசுர வாங்குவானுக
அப்படி கற்பதால் பெரிய பயனும் இல்லை
நான் கற்காததால் எங்களுக்கு பெரிய நட்டமும் இல்லை
இதற்காக பிள்ளைகளை மூன்று வயதிலிருந்தே கஷ்டப்படுத்தத் வேண்டாமே
அவர்கள் தம் கல்வியை விளையாட்டாக கற்கட்டுமே விளையாட்டோடு.

#NEP

#shared எழுதியவர் CRPF என்பது மட்டும் தெரிந்தது. நேர்மையான வாதம் இந்திய மாநிலங்களின் தாய் மொழிகளை அலசி ஆராய்ந்திருக்கிறார்.

கருத்துகள் இல்லை: