இந்த நிலையில் இந்தியாவின் தென் மாநிலங்களைச் சேர்ந்த தலைவர்கள் கனிமொழிக்கு ஏற்பட்ட விமான நிலைய அனுபவத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எச். டி. குமாரசாமி பகிர்ந்துள்ள ட்வீட்டில், " என் சகோதரி கனிமொழிக்கு ஏற்பட்ட அவமானத்தைக் கண்டிக்கிறேன். தென் இந்தியாவிலிருந்து வரும் அரசியல் தலைவர்கள் எப்படி பாகுபாட்டுடன் நடத்தப்படுகிறார்கள், அவர்கள் வாய்ப்பு எப்படி பறிக்கப்படுகிறது? என்பது குறித்து விவாதிக்க வேண்டிய நேரம் இது," என பதிவிட்டுள்ளார்.
"தேவேகெளட, கருணாநிதி, காமராஜர் உள்ளிட்ட பல தென் இந்திய தலைவர்கள், பிரதமர் ஆவதை "இந்தி அரசியல்" தடுத்திருக்கிறது. தேவேகெளட வெற்றிகரமாக அந்த தடையைத் தாண்டினார். மொழியின் பெயரால் அவர் விமர்சிக்கப்பட்ட எத்தனையோ சம்பவங்கள் உள்ளன" என்று அந்த டிவிட்டர் தொடர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், "தேவேகெளடவின் செங்கோட்டை சுதந்திர தின உரையை இந்தியில் பேசவைத்து வெற்றி அடைந்தது "இந்தி அரசியல்". பிஹார் மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து வந்த விவசாயிகளுக்காகத்தான் அவர் இந்தியில் பேச ஒப்புக் கொண்டார்." என்று குமாரசாமி கூறி உள்ளார்.
தனக்கும் அவ்வாறான அனுபவம் உள்ளதாக கூறியுள்ள குமாரசாமி, "நான் இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்தேன். ஆளும் வர்க்கம் தென் இந்தியர்களை அலட்சியம் செய்திருக்கிறது. இந்தி அரசியல்வாதிகளின் சூழ்ச்சி நான் கவனித்து இருக்கிறேன். அவர்கள் இந்தி பேசாத அரசியல்வாதிகளை மதிப்பதில்லை," என குறிப்பிட்டுள்ளார்.
அரசியலைக் கடந்து, அரசு மற்றும் பொதுத் துறை வேலைவாய்ப்புகளும் இந்தி பேசாதவர்களுக்கு மறுக்கப்படுவதாக, தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் நடப்பதாகவும் கன்னடம் மொழிக்கான இடம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியும் ஒரு மொழி என்கிறது மத்திய அரசு. ஆனால், இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் இந்தியைப் பரப்பப் பல கோடிகள் செலவிடுவதாகவும் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
பல வழிகளில் தொடர்கிறது
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த விருதுநகர் தொகுதி மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர், மத்தியில் ஆட்சியில் உள்ள அமைப்புகளின் இந்தி திணிப்பு நடவடிக்கை பல வழிகளில் தொடருவதாகக் கருத்து வெளியிட்டிருந்தார்.
இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்துள்ள தயாநிதி மாறன் அந்தந்த மாநில மொழி தெரிந்தவர்களையே விமான நிலையங்களில் பணியமர்த்த வேண்டும் என கூறி உள்ளார்.
இந்த விவகாரம் தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல். சந்தோஷ் பதிவிட்ட கருத்தில், தமிழ்நாட்டில் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் இப்போதே தொடங்கி விட்டதாகக் கூறியுள்ளார்.
அதற்கு பதில் அளித்துள்ள காங்கிரஸ் உறுப்பினர் மாணிக்கம் தாகூர், இந்த ஆணவத்துக்கு அதிகப்படியான விலை கொடுக்க நேரிடும் என்றும், நடந்த சம்பவத்துக்கு சிஐஎஸ்எஃப் துறையே வருத்தம் கோரிவிட்ட நிலையில், இதை ஏன் பாஜக, திமுக இடையிலான விவகாரமாக கொண்டு செல்கிறீர்கள்? பெங்களூரு விமான நிலையத்தில் அத்தகைய அனுபவம் உங்களுக்கு நடந்திருந்தால் என்ன செய்வீர்கள்? என்று தமது டிவிட்டரில் மேலும் மாணிக்கம் தாகூர் பதிவிட்டுள்ளா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக