மெக்சிகோவில் 1000
ஆண்டுகள் பழமையான, மாயன் நாகரிகத்தை சேர்ந்த பழம்பெரும் மாளிகை ஒன்றின்
இடிபாடுகளை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
யுகாடன்
மாகாணத்தில் உள்ள குலுபா என்ற பழமையான நகரத்தில் நடந்த
அகழ்வாராய்ச்சியில்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது. மாளிகை என்று
கருதப்படும் அக்கட்டடம் 20 அடி உயரமும், 55 மீட்டர் நீளமும், 15 மீட்டர்
அகலமும் கொண்டிருந்தது
மாயன் நாகரீகத்தை சேர்ந்த மாளிகை ஒன்றின் இடிபாடுகள்
ஸ்பெயின் இப்பிராந்தியத்தை கைப்பற்றும் முன்புவரை அங்கு மாயன் நாகரிகமே இருந்து வந்தது.
அந்த காலத்தில் மாயன்கள் தற்போது இருக்கும் குவாடமாலா, தென் மெக்சிகோ, பெலிஸ் மற்றும் ஹோண்டூரஸ் ஆகியவற்றின் பெரும் பகுதிகளை ஆண்டுவந்தனர்
அந்த காலத்தில் மாயன்கள் தற்போது இருக்கும் குவாடமாலா, தென் மெக்சிகோ, பெலிஸ் மற்றும் ஹோண்டூரஸ் ஆகியவற்றின் பெரும் பகுதிகளை ஆண்டுவந்தனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக