சனி, 28 டிசம்பர், 2019

டெல்லியில் கடும் குளிர் - 2.4 டிகிரி செல்சியஸ் அளவுக்கு .. வீடியோ


தினத்தநதி  : புதுடெல்லி,டெல்லியில், நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பனிக்காலம் ஆகும். இந்த 4 மாதங்களும் கடும் குளிர் மக்களை நடுங்கவைத்து விடும்.
கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு பனிப்பொழிவு அதிகமாக இருக்கிறது. டெல்லியில் நேற்று அதிகாலை 6.30 மணிக்கு முக்கிய பகுதியான சப்தர்ஜங் ஆய்வகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 4.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி உள்ளது. பகல் நேரத்தில் அதிகபட்சமாக 12 முதல் 13 டிகிரிவரை வெப்பநிலை இருந்தது. இதே பகல் நேரத்தில் நேற்று சென்னையின் வெப்பநிலை 28 டிகிரியாகவும், ஊட்டியின் வெப்பநிலை 17 டிகிரியாகவும் இருந்தது. கடும் குளிரால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
பனிப்பொழிவால் நாள் முழுவதும் சூரியனையே பார்க்க முடியாத நிலை உள்ளது. சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள பொருட்கள் தெரிவதில்லை. இதனால் ரெயில் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
டெல்லியில் இன்று காலை  6.10  மணி நிலவரப்படி குறைந்த பட்ச வெப்ப நிலை 2.4 டிகிரி செல்சியசாக இருந்தது. இதனால், டெல்லியில் வசிக்கும் மக்கள் கடும் அவதி அடைந்தனர்

கருத்துகள் இல்லை: