திங்கள், 23 டிசம்பர், 2019

ஜார்க்கான்ட்.. காங்கிரஸ் JMM வெற்றி முகம்! ...தேர்தல் முடிவுகள் நேரடியாக.. Special Coverage On Jharkhand Assembly Election Results Live



tamil.samayam.com : இந்நிலையில் ஜார்க்கண்டில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் பாஜக் உள்ளது.
ஜார்க்கண்ட் தேர்தல்: முந்தும் காங்கிரஸ், பிந்தும் பாஜக!
வாக்கு எண்ணும் மையங்களுக்கு துணை ராணுவ படை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் ஆட்சியைக் கைப்பற்ற காங்கிரஸ் கட்சி ஜேஎம்எம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
 ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு ஐந்து கட்டங்களாக நடைபெற்றன. டிசம்பர் 20ஆம் தேதி கடைசி கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
 இந்நிலையில் இன்று (டிசம்பர் 23) ஜார்க்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குகள் காலை 8 மணி முதல் எண்ணப்பட்டுவருகின்றன.  மொத்தமுள்ள 81 தொகுதிகளில் எந்தக் கூட்டணி 41 தொகுதிகளில் வெற்றிபெறுகிறதோ அந்தக் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும்.
<
 பாஜக ஆட்சியிலிருக்கும் இந்த மாநிலத்தில் பாஜக கூட்டணிக்கும், காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. அந்த வகையில் சற்று முன் நிலவரப்படி காங்கிரஸ்-ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

அந்தக் கூட்டணி 27 தொகுதிகளிலும் பாஜக 13 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளன.

பாஜக மத்தியில் தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சியைப் பிடித்திருந்தாலும் மகாராஷ்டிரா உட்பட சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல்களில் தனது பிடியை இழந்துவருகிறது. மேலும் தற்போது குடியுரிமை சட்டத் திருத்தம், என்.ஆர்.சி. ஆகியவை மூலம் நாடு முழுவதும் பாஜக எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சட்டமன்றத் தேர்தல்களிலும் பாஜக வெற்றியைப் பெற்றால் மட்டுமே மாநிலங்களவையில் செல்வாக்கு பெறமுடியும்.

கருத்துகள் இல்லை: