Vishnupriya R ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகளில் ஜேஎம்எம்- காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை எண்ணை தாண்டி விட்டதால் அக்கூட்டணி ஆட்சி அமைக்கும் என தெரிகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள 81 தொகுதிகளுக்கு மொத்தம் 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று கடந்த வெள்ளிக்கிழமை முடிந்துவிட்டது. இதன் முடிவுகள் இன்று வெளியாகி வருகிறது.
மொத்தமுள்ள 81 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 41 இடங்கள் தேவைப்படுகிறது. தற்போது காங்கிரஸ்- ஜேஎம்எம்- ஆர்ஜேடி கூட்டணி 43 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
பாஜக மட்டுமே 27 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது.
ஜேஎம்எம்- 25 தொகுதிகளிலும் காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் ஆர்ஜேடி 5 தொகுதிகளிலும் ஜேவிஎம்- 4 இடங்களிலும் பாஜகவின் முன்னாள் கூட்டணி கட்சியான ஏஜேஎஸ்யூ-3 தொகுதிகளிலும் , பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் கம்யூனிஸ்ட் (எம்எல்) ஒரு தொகுதியிலும், இரு தொகுதிகளிலும் சுயேச்சைகளும் முன்னிலை வகித்து வருகின்றன.
இன்னும் பல சுற்றுகள் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. ஜேஎம்எம் தலைவர் ஜேமந்த் சோரன் ஒரு தொகுதியில் முன்னிலை.. மற்றொரு தொகுதியில் பின்னடைவு அறுதி பெரும்பான்மையை காங்கிரஸ் கூட்டணி தாண்டிவிட்டதால் அவர்கள் ஆட்சி அமைக்க பகுஜன் சமாஜ் கட்சியும், கம்யூனிஸ்ட் (எம்எல்எல்) கட்சியும், சுயேச்சைகளும் ஆதரவு அளிக்கும் என தெரிகிறது.
மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் அக்கட்சியை காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஓரங்கட்டிவிட்டு ஆட்சி அமைக்கும் என்றே தெரிகிறது. அப்படி நடந்தால் மகாராஷ்டிரத்தை போல் ஜார்க்கண்டிலும் பாஜக ஆட்சியை இழக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை பிடித்தால் இங்கு முதல் முறையாக முத்திரை பதித்தது என்ற பெருமை காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கும்.
மாநிலத்தில் முதல்முதலில் 200-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அன்றிருந்து கடந்த தேர்தல் வரை ஜேஎம்எம், பாஜகவே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்தது. ஒரு முறை மட்டும் 2005-ஆம் ஆண்டு பாஜகவின் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் ஆட்சி கவிழ்ந்தவுடன் 2006 முதல் ஒரு ஆண்டுக்கு சுயேச்சையான மதுகோடா முதல்வராக பதவி வகித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக