திங்கள், 23 டிசம்பர், 2019

பா.ஜ.க.வுக்கு ஜார்க்கண்ட் வழங்கிய மரண அடி...ஆனந்தக் கொண்டாட்டத்தில் காங்கிரஸ், JMM ...!

Jharkhand Election Results.nakkheeran.in - ஜீவாதங்கவேல் நடந்து முடிந்த ஜார்க்கண்ட் மாநில தேர்தலில் இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 82 தொகுதிகளில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி சுமார் 50 இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன்  ஆட்சி அமைக்க உள்ளது. முன்பு ஆட்சி புரிந்த பா.ஜ.க. 20 இடங்களில் சுருண்டு காங்கிரஸ் கூட்டணியிடம் ஆட்சியை பறிகொடுத்ததோடு பா.ஜ.க.வின் ஆட்சிக்கு முதல்வராக இருந்தவர் ரகுபர் தாஸ், இவரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்ட சரையு ராய்யிடம் பரிதாபமாக தோல்வியுற்றார்.
இந்த வெற்றிக் கொண்டாடத்தை நாடு முழுவதும் காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள். அதன்படி ஈரோடு மாநகரில் மாவட்ட காங்கிரஸ் சார்பில் இன்று அக்கட்சி அலுவலகத்தில்  காங்கிரஸ் நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.


நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஈபி ரவி தலைமை தாங்கினார்.  பொதுமக்களுக்கும்  இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பரிமாறினார்கள். 1991 முதல் 1996 வரை முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 1996 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்ட பர்கூர் தொகுதியில் மக்கள் தோல்வியை பரிசாக கொடுத்தனர். அதுபோல  ஜார்கண்ட் மாநில பா.ஜ.க. முதல்வர் ரகுபர் தாஸ்க்கு தோல்வியை வழங்கி பா.ஜ.க.வுக்கு பாடம் கற்பித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: