thanthitv.com: ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்க உள்ள,
முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், வருகிற 29-ம் தேதி பதவியேற்க
உள்ளார்.
ஜார்கண்ட் மாநில முதலமைச்சராக
பதவியேற்க உள்ள, முக்தி மோர்ச்சா செயல் தலைவர் ஹேமந்த் சோரன், வருகிற 29-ம்
தேதி பதவியேற்க உள்ளார். இதற்காக, டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர்
சோனியா காந்தியின்
இல்லத்திற்கு சென்ற ஹேமந்த் சோரன், விழாவில் பங்கேற்க
நேரில் அழைப்பு விடுத்தார். அப்போது, ராகுல்காந்தி பங்கேற்பார், என
சோனியா காந்தி கூறியதாக, செய்தியாளர்களிடம் பேசிய சோரன் குறிப்பிட்டார்.
மேலும், பதவியேற்பு விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை
அமைச்சர் அமித்ஷாவையும் அழைக்க உள்ளதாக ஹேமந்த் சோரன் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக