வெள்ளி, 27 டிசம்பர், 2019

போராட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது நோர்வே பயணி வெளியேற உத்தரவு...


நக்கீரன் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக இந்தியா முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. டெல்லி ஜமிலியா பல்கலைக்கழக மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராடியபின் போலீஸார் அவர்களை தாக்கினார்கள். இதனால் இந்தியா முழுவதும் கண்டன குரல்கள் வலுவானது. இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் இந்த சட்டத்திற்கு எதிராக போராட தொடங்கினார்கள்.அந்த வகையில் சென்னை ஐஐடியில் பயிலும் மாணவர்கள் சிஏஏ-வுக்கு எதிராக போராடினார்கள். அப்போது ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஜேக்கப் என்ற மாணவரும் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டார்.
அவர் கையில் வைத்திருந்த பதாகையில் ”அன்று நாங்கள் அங்கிருந்தோம்” ( “1933 to 1945; We Have Been There”) என நாஜி ஆட்சியை குறிக்கும் வகையில் எழுதப்பட்டிருந்தது.
இதன் பின் அவர் விசா நெறிமுறையை மீறி செயல்பட்டதற்காக மீண்டும் ஜெர்மனிக்கு அனுப்பப்பட்டார். இதேபோல கேரளாவில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட 74 வயது நார்வேவை சேர்ந்த பெண் சுற்றுலா பயணியையும் அவருடைய சொந்த நாட்டிற்கு செல்லுமாறு ஃபாரீன் ரீஜினல் ரெஜிஸ்ட்ரேசன் அறிவித்துள்ளது

கருத்துகள் இல்லை: