nakkheeran.in/author/kalaimohan :
சிலை கடத்தலில் இரண்டு தமிழக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளதாக உயர்நீதிமன்றத்தில் பொன்மாணிக்கவேல் தகவல் அளித்துள்ளார்.
சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காக தன்னை அவருடன் கூட்டுச் சேர்ந்து கைது செய்திருப்பதாக டிஎஸ்பியாக இருந்த காதர் பாஷா வழக்கு தொடர்ந்திருந்தார். தன்னை பழி வாங்கும் நோக்கத்தில் கைது செய்த பொன்மாணிக்கவேல் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என தமிழக உள்துறை செயலாளரிடமும், தமிழக தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்திருந்தார். கடந்த ஏப்ரல் மாதத்தில் கொடுத்த அந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் டிஎஸ்பி காதர்பாஷா வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் சிபிசிஐடி போலீசார் பொன்மாணிக்கவேல் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் தன்னையும் இணைத்துக் கொள்ள வேண்டும் பொன்மாணிக்கவேல் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அப்பொழுது பொன்மாணிக்கவேல் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழகத்தை சேர்ந்த இரண்டு அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும், அது தொடர்பான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும் அவற்றை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார். அதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பொன்மாணிக்கவேல் தரப்பில் அவரது வழக்கறிஞர் வாய்மொழியாக கூறிய தகவல்களை பிரமாணப்பத்திரமாக அதற்கான ஆவணங்களை இணைத்து தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருக்கிறார்கள். இதனையடுத்து வழக்கு விசாரணை ஆகஸ்ட் 6ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சிலை கடத்தலில் முக்கிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாகவும், அதில் சில தொழில் அதிபர்களும், அமைச்சர்களும் இருப்பதாக கடந்த முறையை நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் பொன்மாணிக்கவேல். இதற்கிடையில் அவர் ஓய்வு பெற்றதால் அவர் ஐஜி என்ற பொறுப்பிலிருந்து விலகிய அவரை உயர்நீதிமன்றம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக நியமித்தது.
பணியில் இருக்கும் பொழுதே அமைச்சருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைத்ததுடன் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்திருந்தார் பொன்மாணிக்கவேல். அதேபோல் எனக்கு போதிய ஒத்துழைப்பு தருவதற்கு அரசு மறுக்கிறது அதனால் தான் முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய முடியவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரிடம் என்ன ஆதாரங்கள் இருக்கிறது என்ற விவரங்களை வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக