மாலைமலர் :
ஜே.என்.யூ. பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின்
முன்னாள் தலைவர் கண்ணையா குமார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய
செயற்குழு உறுப்பினராக இன்று தேர்வு செய்யப்பட்டார்.
ஜே.என்.யூ. என்றழைக்கப்படும் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவராக பொறுப்பு வகித்த கண்ணையா குமார் கடந்த 2016-ம் ஆண்டு ஜே.என்.யூ. பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவுக்கு எதிராக முழக்கமிட்டதாக அவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
< இதன் மூலம் நாடு முழுவதும் பிரபலமடைந்த கண்ணையா குமார் பல மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து இடதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தி பொதுக்கூட்டங்களில் பேசி வந்தார்.
ஷமீம் ஃபைஸீ என்ற உறுப்பினரின் மறைவினால் காலியாக இருந்த பதவியில் அவரை நியமித்துள்ளதாக அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

2019- பாராளுமன்ற தேர்தலில், பீகார் மாநிலத்தில் உள்ள
பேகுசராய் பாராளுமன்ற தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளராக கண்ணையா
குமார் போட்டியிட்டு தோல்வி அடைந்தார்.
இந்நிலையில்,
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்ட் தேசிய குழு கூட்டத்தில்
அக்கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினராக கண்ணையா குமார் இன்று தேர்வு
செய்யப்பட்டார்.
ஷமீம் ஃபைஸீ என்ற உறுப்பினரின் மறைவினால் காலியாக இருந்த பதவியில் அவரை நியமித்துள்ளதாக அக்கட்சியின் தலைமை இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக