வெள்ளி, 26 ஜூலை, 2019

பாக்கிஸ்தானில் இந்து பெண்கள் கடத்தபட்டு இஸ்லாமியர்களாக்கி கட்டாய கல்யாணம் - சர்வதேச ஊடகம்


reena_raveena  பாக்கிஸ்தானில் காணாமல்போகும் இந்து யுவதிகள் இஸ்லாமியர்களாக திரும்புகின்றனர்- சர்வதேச ஊடகம் reena raveena e1564148067787 வீரகேசரி : பாக்கிஸ்தானில் இந்துமதத்தை சேர்ந்த இளம்பெண்கள் காணாமல்போவதும் பின்னர் அவர்கள் முஸ்லீம்களாக திரும்புவதும் அதிகரித்துள்ளதாக ஏபிசி செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
ரீனா ரவீனா என்ற இரு இந்து சகோதரிகளின் அனுபவத்தை அடிப்படையாக வைத்து ஏபிசி இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. தங்கள் இரு புதல்விகளும் கடத்தப்பட்டனர் இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர் பின்னர் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்களை மணமுடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டனர் என அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.
தனது இரு பிள்ளைகள் இருக்குமிடங்களை கண்டுபிடித்த பின்னர் தான் உள்ளுர் பொலிஸ்நிலையத்தின் முன்பாக ஆர்ப்பாட்டம் செய்ததாக ரீனா ரவீனா சகோதரிகளின் தந்தை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே திருமணமாகி பிள்ளைகள் உள்ள இருவருக்கே தங்கள் புதல்விகளை திருமணம் செய்து வைத்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றவேளை சகோதரிகள் கடத்தப்பட்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள மறுத்த நீதிமன்றம் அவர்கள் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என தெரிவித்துள்ள கணவமன்மார்களுடன் அவர்களை சேர்த்துவைக்கும்படி உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டதும் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த சிலர் நீதிமன்றத்திற்கு வெளியே இதனை கொண்டாடினர். ரீனா ரவீனாவின் தாய் மௌனமாக அழுதபடி நீதிமன்றத்திலிருந்து வெளியேறினார்.
இதேவேளை சுமார் ஆயிரத்திற்கும் அதிகமாக சிறுமிகள் கடந்த வருடம் பலவந்தமாக இஸ்லாமிய மதத்திற்கு மாற்றப்பட்டனர் என பாக்கிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையகம் தெரிவிக்கின்றது. தனது வருடாந்த அறிக்கையில் பாக்கிஸ்தானின் மனித உரிமைகள் ஆணையகம் இதனை தெரிவித்துள்ளது.
இவ்வாறான நடவடிக்கை நீண்டகாலமாக இடம்பெறுகின்றது என தெரிவிக்கும் பாக்கிஸ்தானின் மனித உரிமை அமைப்புகள் வறியகுடும்பங்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களை சேர்ந்த இந்து மற்றும் கிறிஸ்தவ பெண்கள் இலக்கு வைக்கப்படுகின்றனர் எனவும் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: