:tamilnews18.: ஷீலா தீக்சித்தின் மறைவைத் தொடர்ந்து இரண்டு நாளுக்கு டெல்லி அரசு துக்கம் அனுசரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியின் மறைந்த முன்னாள் முதல்வர் ஷீலா தீக்சித்தின் உடலுக்கு பிரதமர் மோடி, சோனியா காந்தி, மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி உள்ளிட்டத் தலைவர்கள் நேரில் சென்று மலர்வைத்து அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் கட்சியின் மிக மூத்த தலைவரும், டெல்லி மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான ஷீலா தீக்சித், இன்று மதியம் 4 மணி அளவில் உயிரிழந்தார். உடல் நலக்குறைவின் காரணமாக சில நாள்களுக்கு முன்னர், டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஷீலா தீக்சித் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்குப் பின், அவரது உடல் டெல்லி நிஜாமுதீன் பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஷீலா தீட்சித் உடலுக்கு முக்கிய பிரமுகர்களும் பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் நரேந்திர மோடி, நேரில் சென்று ஷீலா தீக்சித்தின் உடலுக்கு மலர் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல, சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் நேரில் சென்று மலர் வைத்து அஞ்சலி செலுத்தினர். நாளை, மாநில அரசு மரியாதையுடன் ஷீலா தீக்சித்தின் உடலுக்கு இறுதிச் சடங்கு செய்யப்படும். ஷீலா தீக்சித்தின் மறைவைத் தொடர்ந்து இரண்டு நாளுக்கு டெல்லி அரசு துக்கம் அனுசரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக