Samayam Tamil |
நேதாஜி சுபாஷ் சந்திர போன் மகள் அனிதா போஸ் தனது தந்தையின் உடலை ஜப்பானிலிருந்து மீட்க வேண்டும் என்று அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இந்திய சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய தேசிய ராணுவத்தைத்
தோற்றுவித்தவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் நினைவு தினம்
ஆகஸ்ட் 18ஆம் தேதி (இன்று) அனுசரிக்கப்பட்டது.
இந்நிலையில் அவரது மகள் அனிதா போஸ் தன் தந்தையின் உடல் ஜப்பானிலிருந்து
மீட்கப்பட வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1945ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி தைவானில் ஏற்பட்ட ஹெலிகாப்டர்
விபத்தில் நேதாஜி காலமானார் என்றும் 1945ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல்
அவரது உடல் ஜப்பானின் டோக்கியோவில் உள்ள ரென்கோஜி கோயிலிலேயே உள்ளது
என்றும் அனிதா கூறியுள்ளார்.
"இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்பதே என் தந்தையின் நோக்கம். துரதிர்ஷ்டவசமாக அது நிறைவேறாமல் போய்விட்டது. அவரது உடலாவது சுதந்திர இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும். என் தந்தை ஒரு இந்து. எனவே இந்து மத சம்பிரதாயப்படி அவரது அஸ்தியை கங்கையில் கரைக்க வேண்டும்." எனவும் அனிதா போஸ் கோரியுள்ளார்.
டோக்கியோவில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த ஜப்பான்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக