திங்கள், 20 ஆகஸ்ட், 2018

ராஜீவ் காந்தி 74 வது நினைவு அஞ்சலி ..

மின்னம்பலம்:
“ராஜீவ் காந்தியின் அகால மரணம் தன்னுடைய வாழ்க்கையில் ஆழமான வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றுவிட்டது” என்று ராஜீவ் மகனும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 74ஆவது பிறந்தநாள் இன்று (ஆகஸ்ட் 20) நாடு முழுவதும் காங்கிரஸாரால் கொண்டாடப்பட்டுவருகிறது. டெல்லி வீர்பூமியிலுள்ள ராஜீவ் காந்தி நினைவிடம் மலர்களால் அலங்கரிப்பட்டிருந்தது. அங்கு காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட குடும்பத்தினர் அஞ்சலி செலுத்தினர். இதுபோலவே முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத், அசோக் கெலாட் ஆகியோரும் ராஜீவ் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.


தந்தையுடனான நினைவுகள் குறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், “ராஜீவ் காந்தி அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த மனிதர். அவருடைய அகால மரணம் என்னுடைய வாழ்க்கையில் ஆழமான வெற்றிடத்தை உருவாக்கிச் சென்றுவிட்டது.
அவர் எங்களுடன் ஒன்றாக இருந்த நேரங்களை நினைத்துப் பார்க்கிறேன். அவர் உயிருடன் இருந்தபோது பிறந்தநாட்களைக் கொண்டாடிய தருணங்களை அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். மிகப் பெரிய இழப்பு என்றாலும், அவருடைய நினைவுகள் எங்களுடன் எப்போதும் இருக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜீவ் பிறந்தநாள்:  உருகிய ராகுல்பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பிறந்தநாளில் அவருக்கு அஞ்சலி செலுத்துகிறோம். நாட்டை முன்னேற்றப் பாதைக்கு கொண்டு செல்ல அவர் எடுத்த முயற்சிகளை நினைத்துப் பார்க்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை: