வெள்ளி, 24 ஆகஸ்ட், 2018

முலாயம்சிங் யாதவ் : கலைஞர் ஒரு உறுதியான போராளி... அவரது போர்க்குணத்தை நான் கண்டிருக்கிறேன்

சிறப்புக் கட்டுரை: கருணாநிதி ஒரு போராளி!மின்னம்பலம் : முலாயம் சிங் யாதவ் கலைஞரும் நானும் இரு வேறு மொழிகளில் பேசினாலும், செயல்பட்டாலும் மாநிலக் கட்சிகளை மத்திய அரங்கில் செயல்படச் செய்யும் முக்கியமான வரலாற்றுச் செயல்முறையை நாங்கள் இருவரும் பிரதிபலித்திருக்கிறோம் என நம்புகிறேன்.
மிகப் பெரிய மாநிலமான தமிழ்நாட்டில் இருந்துகொண்டு கருணாநிதியும் திமுகவும் தென்னிந்தியாவில் செய்துவந்ததை நான் உட்படப் பலரும் வடஇந்தியாவில், குறிப்பாக உத்தரப் பிரதேசம் போன்ற மக்கள்தொகை அதிகம் கொண்ட மாநிலங்களில் செய்தோம். நாங்கள் இருவரும் சேர்ந்து பல சந்தர்ப்பங்களில் ஒன்றாக வேலை செய்திருக்கிறோம். குறிப்பாக, ஐக்கிய முன்னணி அரசு ஆட்சி செய்த 1996, 1998 ஆண்டுகளில் ஒன்றாக வேலை செய்தோம். எங்களது கட்சிகள் மூலமாக மாநில அரசியல் கருத்தியல்களை மத்திய அரசியலுக்குக் கொண்டுசெல்வதில் பணியாற்றி வந்தோம்.

தனிப்பட்ட வாழ்க்கையிலும் சரி, அரசியல் வாழ்க்கையிலும் சரி; கருணாநிதி உறுதியான போராளி. பல அரசியல் தலைவர்களும் பத்திரிகையாளர்களும் எங்கள் இருவரிடையேயும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதாகக் கூறியிருக்கின்றனர். தனிப்பட்ட முறையிலும், அரசியல் வாழ்க்கையிலும் அவரைப் போலவே நானும் உறுதியாக இருந்திருக்கிறேன்.
1996ஆம் ஆண்டு தேர்தலில் தனிப் பெரும் கட்சியாக இருந்த ஒரே காரணத்துக்காக பாஜகவின் சார்பில் அதன் தலைவர் அடல் பிகாரி வாஜ்பாயை ஆட்சியமைக்கக் குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் சர்மா அழைத்தபோது, கருணாநிதியின் போர்க் குணத்தைப் பார்த்தேன். மதச்சார்பற்ற கட்சிகளின் தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணிக்குப் பெரும்பான்மை பலம் இருந்தது. இந்தக் கட்சிகளின் தலைவர்கள் பாஜக அரசு அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காகக் குடியரசுத் தலைவர் மாளிகைக்குச் சென்றனர். அப்போது, அக்கட்சித் தலைவர்களைக் காலை உணவு விருந்துக்கு அழைத்திருந்தார் குடியரசுத் தலைவர். ஆனால், நாங்கள் அதனைப் புறக்கணிக்க முடிவு செய்தோம். கருணாநிதி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய பொதுச் செயலாளர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித் உள்ளிட்ட தலைவர்கள் குடியரசுத் தலைவர் முன் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தனர். நமது ஜனநாயக அரசியல் கோட்பாட்டின் வலிமை பறைசாற்றப்பட்ட தினம் அது.
எங்களுக்குள் ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேற்றுமைகளும் காணப்பட்டன. 1999ஆம் ஆண்டு திமுக பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தது. அரசியல் ரீதியாகத் தவறான நிலைப்பாடு எடுத்ததை உணர்ந்த கருணாநிதி 2004ஆம் ஆண்டு மீண்டும் மதவாதம் மற்றும் இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராகத் திரும்பினார்.
நாங்கள் இருவரும் காங்கிரஸுக்கு எதிராகத்தான் எங்கள் அரசியலைத் தொடங்கினோம். ஆனால், பின்னாளில் எங்கள் நிலைப்பாடுகளில் நுட்பமான மாற்றம் ஏற்பட்டது. ஜனநாயகத்துக்கும் மதசார்பின்மைக்கும் பெரிய அச்சுறுத்தல்கள் வந்தபோது, அதை எதிர்ப்பதற்காக எங்களுடைய அரசியல் நிலைப்பாடுகளை மாற்றிக்கொண்டோம். இதனால், காங்கிரஸுக்கு எதிரான நிலையை நாங்கள் துறந்துவிட்டோம் என்று அர்த்தமல்ல. பாஜக, ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கம் ஆகியவற்றின் தலைமையிலான சங்கப் பரிவாரங்களால் முன்னிறுத்தப்படும் மதவாதக் கொள்கைகளின் வளர்ச்சியைக் கருத்தில்கொண்டு நாங்கள் புதிய அரசியல் யதார்த்தங்களுக்கேற்ப எங்களைத் தகவமைத்துக்கொண்டோம்.
இந்தி, தமிழ் ஆகிய மொழிகளுக்கிடையேயான பிரச்சினை விஷயத்தில் எங்கள் இருவருக்குமிடையே வேறுபாடு நிலவியதாகச் சிலர் கூறினார்கள். ஆனால், அப்படி எதுவும் இல்லை. நாங்கள் எப்போதுமே இந்தியாவிலுள்ள எல்லா மாநில மொழிகளுக்கும் மதிப்பளித்து வந்தோம். கருணாநிதியின் உணர்வானது தமிழ்நாட்டுக்கு வளமான எதிர்காலம் அமைவதற்கான வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எனக்கு உறுதியான நம்பிக்கை இருக்கிறது.
நன்றி: ஃப்ரன்ட்லைன் கருணாநிதி சிறப்பிதழ்
தமிழில்: சா.வினிதா
வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!
மின்னம்பலம் தமிழின் டிஜிட்டல் தினசரி இதழ் எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடம் கொடுக்காமல், ஊடக அறத்தின் துணை கொண்டு ஜனநாயகப் பயணம் மேற்கொண்டிருப்பதைத் தாங்கள் அறிவீர்கள்.
சாமானிய மக்களின் நலனுக்காக, ஒட்டுமொத்த நாட்டு நலனுக்காக மின்னம்பலம் வெளியிடும் செய்திகள், கட்டுரைகள், புலனாய்வுகளுக்குப் பின்னணியில் பலத்த உழைப்பும் நேர்மையும் இருக்கிறது. மின்னம்பலத்தின் இந்தச் சீரிய பயணம் பொருளாதாரப் பிரச்சினைகளால் பாதிக்கப்படாமல் இருக்க வாசகர்களின் ஆதரவைக் கோருகிறோம்.
மின்னம்பலத்தை நேசிக்கும் வாசகர்கள் சந்தா செலுத்துவது, நன்கொடை வழங்குவது போன்றவற்றின் மூலமாக எங்களுக்கு உதவலாம்.
மின்னம்பலத்துக்கு ஆதரவளியுங்கள், தோள் கொடுங்கள். தொடர்ந்து பயணிப்போம்!
சந்தா கட்டணத்தை உங்கள் (ஆண்ட்ராய்டு/ ஐபோன்) செல்போனிலிருந்தே செலுத்துவதற்கான எளிய வழிமுறைகள் இதோ...
1. பின்வரும் ஏதாவது ஒரு UPI செயலியை (ஆப்) உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்யவும். அதன்பின் அந்தச் செயலியில் உள்ள உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியைக் (Virtual Private Address) குறித்துக் கொள்ளுங்கள்.
பீம் (BHIM) Android / IOS
டெஸ் (TEZ) Android / IOS
போன்பே (PhonePe) Android / IOS
பேடிஎம் (Paytm) Android / IOS
2. பின்னர் கீழே உள்ள என்.மின்னம்பலம் வலைப் பக்கத்தை க்ளிக் செய்யுங்கள். அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களைப் பதிவு செய்து, நீங்கள் விரும்பும் சந்தா தொகையைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் உங்கள் மொபைல் கட்டணச் சேவை முகவரியை அதற்கான இடத்தில் உள்ளிட்டு, தொகையைச் செலுத்தலாம்.
en.minnambalam.com/subscribe.html
3. மீண்டும் உங்கள் செயலிக்குச் சென்று பணப் பரிவர்த்தனைக்கு ஒப்புதல் அளிக்கவும்.
சந்தேகங்கள் இருப்பின் தொடர்பு கொள்ள வாட்ஸ் அப் எண் +91 6380977477

கருத்துகள் இல்லை: