Annamalai Arulmozhi : கேரளாவின பெரு மழையில் மூன்றரை லட்சம் மக்கள்
அகதிகளாகி அவதிப்படுகிறார்கள்.
ஈழத்திற்கு எதிராக செயல்பட்ட கேரளத்து அதிகாரிகள் நம் நினைவிற்கு வரவில்லை.
கர்நாடகாவில் பெய்யும் பெருமழையில்
வறண்ட காவிரி நினைவுக்கு வந்தாலும்
கர்நாடக மக்கள் நீரில் மூழ்கி சாக வேண்டும் என்று நாம் பழிப்பதில்லை.

ஆனால் சுனாமிப் பேரழிவுக்கு சங்கராச்சாரி கைதுதான் காரணம் என்று தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பேசினார்கள்.
இதோ இப்போது ...
அய்யப்பன் கோயிலுக்குள் செல்ல குறிப்பிட்ட வயதுப் பெண்களை அனுமதிக்க மறுப்பது தவறு என்று உச்ச நீதிமன்றம் சொல்வதால்தான் கேரளாவில் அழிவு என்று நீதிபதிகள் புரிந்து கொள்ளவேண்டுமாம்..
ஆர்.எஸ்.எஸ் குருமூர்த்தி நேரடியாக மிரட்டுகிறார்.
அதையே கேரளத்து அர்ச்சகர் ஒருவரும் சிரித்துக்கொண்டே பேசும் ஒரு வீடியோவும் உலவுகிறது.
நடிகவேள் எம்.ஆர்.ராதா இருந்திருந்தால்
கொலைகாரக் கூட்டமடா ராமா என்று பேசியிருப்பார்.
பக்தர்களிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சங்கரராமன் கொலைக்கு நீதி வேண்டும் என்று கேட்டார்கள். ஆனால் சங்கராச்சாரியே கொலைசெய்யத் துணிந்து விட்டதால் சுனாமி வந்தது என்று பேசவில்லை.
கோயிவுக்குள் செல்வதற்குப் போராடும் பக்தர்களோ எங்களை உள்ளே விடமாட்டேன் என்று தடுப்பதால்தான் அய்யப்பன் கோயிலே மூழ்கும் அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து வந்தது என்று பேசுவதில்லை.
இந்தக் காலத்திலேயே இப்படிப் பேசுகிறார்கள் என்றால் ... பக்தியைப் போர்வையாகக் கொண்ட இந்த கொடியவர்களின் கூட்டம் இயற்கை நிகழ்வுகளுக்கு தங்கள் சுயநலத்துக்கேற்றபடி அர்த்தம் கற்பித்து பக்தி நிறைந்த நம் மன்னர்களை சகுனங்களின் பெயரால் என்ன பாடுபடுத்தியிருக்கும் என்று சொல்லத் தேவையில்லை.
இவர்களின் இந்த மிரட்டல்களுக்கு பயந்த மன்னர்கள் எப்படியெல்லாம் நடுங்கி இவர்களின் கைப்பாவையாக செயல்பட்டிருப்பார்கள் என்று நினைத்துப் பார்க்கிறேன்.
வரலாற்றின் இரத்தச் சுவடுகளுக்கு காரணம் மன்னர்களை இயக்கிய குருமூர்த்தி போன்ற கொடுமனம் கொண்டவர்களே என்பதை அவர்கள் வாயால் உறுதிப் படுத்துகிறார்கள். புரிந்து கொள்வோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக