நக்கீரன் - சி ஜீவா பாரதி
: கேரளாவைப் போலவே கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் மழை வெள்ளத்தால்
பாதிக்கப்பட்டு மீண்டு வருகிறது. மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரும்
கர்நாடகாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ சபை உறுப்பினரான நிர்மலா
சீதாராமன் வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியை நேரில் ஆய்வு செய்ய நேற்று
மைசூர் வந்திருந்தார்.
இந்த நிலையில் இன்று காலை மைசூரிலிருந்து ஷராஞ்சி ஹெலிகாப்டர் மூலம் மத்திய அமைச்சர் வந்தடைந்தார். அதன் பின்னர் சாலை வழியாக வெள்ள பாதிப்பு அடைந்த பகுதிகள், மண்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதியில், நிவாரண முகாம்களை நேரடியாக பார்வையிட்டார். அதன் பின்னர் பயணத் திட்டத்தின் படி துணை ஆணையர் அலுவலகத்தில் வெள்ள பாதிப்புகள் குறித்தான நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் பேசுவது தொடர்பான நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால் அதற்கு முன்னர் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிவாரணம் முகாமுக்கும் முன்னாள் இராணுவ அதிகாரிகள் சந்திப்பு என பயணத் திட்டத்தில் இல்லாத இடங்களுக்கு மத்திய அமைச்சர் சென்றிருக்கிறார். நேரடியாக அங்கு சென்ற சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் அதிகாரிகள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அங்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்.
அப்போது கோபமடைந்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், மாநில அமைச்சர் சொல்வதை நான் கேட்க வேண்டுமா? அதிகாரிகளிடம் பேசிவிட்டு நீங்கள் உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என்று மாநில அமைச்சர் கூறியிருக்கிறார். அதன் பின்னர் அதிகாரிகள் இருக்கும் இடத்திற்கு வந்த நிர்மலா சீதாராமன் எந்த அளவிற்கு அதிகாரிகள் முக்கியமோ அந்த அளவிற்கு பரிவாரும் (ராணுவ பரிவாரா அல்ல ஆர் எஸ்எஸ் பரிவாரா என்று தெரியவில்லை) எனக்கு முக்கியம் என அருகிலிருந்த அமைச்சரிடம் கோபத்துடன் கூறினார்.
அதைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ஒரு மாநில அமைச்சரின் உத்தரவுகளை பின்பற்றுகிறார் என்பதை நம்ப முடியவில்லை என்றார் .
அதன் பின்னர் அருகிலிருந்த குடகு துணை ஆணையர் ஶ்ரீவித்யாவை நோக்கி உங்களுக்கும் அமைச்சருக்கும் வெவ்வேறு விதமான கருத்துக்கள் இருந்தால் அதை நீங்கள் பேசிக் கொள்ளுங்கள். என்னை இக்கட்டான சூழலில் தள்ளாதீர்கள். பயணத் திட்டத்தின் படி நான் சென்று கொண்டிருக்கிறேன்.
இத்தனை விஷயங்கள் நடந்த பின்னர்தான் எதிரிலிருந்த மீடியாக்கள் சத்தமாக பேசும்படி சொல்லியிருக்கிறார்கள். அனைத்தையும் பதிவு செய்து கொள்ளுங்கள் என்று கூறியபின்னர், வெள்ள நிவாரண பணிகள் குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் விவாதித்திருக்கிறார். அதன் பின்னர் பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் ஏழு கோடி ரூபாயும் பாராளுமன்ற உறுப்பினர் வளர்ச்சி நிதியில் இருந்து ஒரு கோடி ரூபாயும் வழங்குவதாக அறிவித்தார்.
வெள்ள நிவாரணப் பணிகளை ஆய்வு செய்ய வந்த இடத்தில் அதிகாரிகளை காக்க வைத்துவிட்டு அதன் பின்னர் அமைச்சர் அழைத்ததும் பயணத் திட்டத்தின் படி நான் நடப்பதாகவும் கோபத்துடன் கூறியிருக்கிறார் அங்கிருந்த அதிகாரிகளும் மற்றும் மக்கள் மத்தியில் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. மேலும் அங்கிருந்த பாஜகவினர் சிலரே மத்திய அமைச்சரின் இந்த நடவடிக்கையால் வேதனை அடைந்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக