தினமலர் :சென்னை : ‛பெண்களை கொச்சைப்படுத்தி கவிதை
வெளியிட்ட மனுஷ்யபுத்திரன், அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு
கேட்க வேண்டும்' என பா.ஜ., முன்னாள் பிரமுகர் ஜமீலா தெரிவித்தார்.
இதகுறித்து கமிஷனரிடம் புகார் ஒன்றையும் அவர் அளித்துள்ளார்.
திமுக.,வை சேர்ந்த கவிஞர் மனுஷ்யபுத்திரன், ‛ஊழியின் நடனம்' என்னும் தலைப்பில் பெண்ணை மையமாக வைத்து இயற்கை சீற்றம், மழை வெள்ளத்தைப் பற்றி கவிதை எழுதியிருந்தார். இதனை கடந்த 18ம் தேதி அவரது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார். அவரது அக்கவிதை பெண்களுக்கு எதிராகவும், இந்து பெண் தெய்வங்களை பழிப்பது போன்றும் இருப்பதாக பல்வேறு தரப்பிலிருந்தும் கண்டனம் எழுந்தது.
இந்நிலையில் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கும்படி முன்னாள் பா.ஜ., பிரமுகர் ஜமீலா போலீஸ் கமிஷரிடம் புகார் ஒன்றை அளித்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது: ‛ஊழியின் நடனம்' எனும் தலைப்பில் கேரளாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையும், பெண்களின் மாதவிடாய் குருதியையையும் இணைப்புப்படுத்தி கவிதை ஒன்றை மனுஷ்யபுத்திரன் பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார். அதில் மிகவும் ஆபாசமாகவும், கொச்சையாகவும் அவர் வார்த்தைகளை பயன்படுத்தியிருந்தார்.
மனுஷ்ய புத்திரனின் இந்த கவிதைக்கு திமுக தரப்பினர் கூட ஆதரவு தர மாட்டார்கள். சுய விளம்பரத்துக்காக மட்டுமே அவர் இவ்வாறு செய்துள்ளார். பெண்களை பற்றி பெருமையாக கூறுங்கள்; சிறுமை படுத்தாதீர்கள். இக்கவிதைக்காக மனுஷ்யபுத்திரன், அனைத்து பெண்களிடமும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக