இந்திய தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வோர் ஆண்டும் நாட்டில் நடைபெறும் குற்ற ஆவணங்கள் குறித்த பட்டியலை வெளியிடுகிறது. இந்த நிலையில் 2016ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் யோகி ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தரப்பிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
நாட்டில் மொத்தமாக 2016ஆம் ஆண்டில் 30,450 கொலைகள் நடந்துள்ளன. இது 2015ஆம் ஆண்டை ஒப்பிடும்போது 5.2 சதவிகிதம் குறைவாகும். 2015ஆம் ஆண்டில் 32,127 கொலைகள் நடந்துள்ளன. குற்றங்கள் அதிகமாக நடந்த மாநிலங்களில் பாஜக ஆளும் மாநிலங்களே முன்னணியில் உள்ளது. கடந்த ஆண்டு நாட்டில் நடந்துள்ள மொத்த குற்றச்செயல்களில் 9.5 சதவிகிதம் உத்தரப்பிரதேசத்தில்தான் நடந்துள்ளன.
அதேபோல, மத்தியப்பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்துவருகிறது. இந்த மாநிலத்தில் 2016ஆம் ஆண்டில் 8.9 சதவிகிதச் குற்றச்செயல்கள் நடந்துள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இந்த மாநிலத்தில் 2016ஆம் ஆண்டில் 8.8 சதவிகிதக் குற்றங்கள் நடந்துள்ளன.
முதல் மூன்று இடங்களை பாரதிய ஜனதா கட்சி ஆளும் வடமாநிலங்கள் பிடித்திருந்தாலும், நான்காவது இடத்தில் கேரளா உள்ளது. கேரளாவில் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி செய்து வருகிறது. 2016ஆம் ஆண்டில் 8.7 சதவிகிதம் குற்றச் செயல்கள் இம்மாநிலத்தில் நடந்துள்ளதாகக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கை கூறுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக