அகமதாபாத்திற்கும் இடையேயான இந்த அதிவேக ரயில் அமைப்பு முறை(HSRS) மொத்தம் 11 நிறுத்தங்களை கொண்டது. மும்பை தானே விரர் போசர் எனும் 4 நிறுத்தங்கள் மகாராஷ்டிர மாநிலத்திலும், வாபி வல்சாட் சூரத் பரூச் பரோடா ஆனந்த் மற்றும் சபர்மதி/ அகமதாபாத் எனும் 8 நிறுத்தங்கள் குஜராத்திலும் என ஒரு சில பகுதிகளை தவிர்த்து முழுவதும் உயர்ந்த தடங்கள் வழியே பயணிப்பதாகும். இதில் தானே-விரர் பகுதிகளுக்கு இடையேயான 21 கிலோமீட்டர் பாதை, முற்றிலும் பூமிக்கு அடியிலும் அதில் 7 கிலோமீட்டர் தூரம் அரபிக்கடலில் சுரங்கப்பாதையாகவும் அமைக்கப்பட உள்ளது.
பயண நேரம்:-
6 முதல் 10 பெட்டிகளை கொண்டு இயக்கப்படவிருக்கும் இந்த அதிவேக ரயில் 1300 முதல் 1600 பயணிகளை ஒரே நேரத்தில் மும்பைக்கும் அகமதாபாத்திற்கும் இடையே சுமந்துசெல்லும். பரோடா சூரத் என்ற இரண்டு நிறுத்தங்களை கொண்ட துரித சேவையாக மணிக்கு 350 கி. மீ வேகத்தில் பயணித்து 2 மணிநேரம் 8 நிமிடத்தில் பயணத்தை முடிக்கும். சாதாரண சேவையாக மேற்சொன்ன 12 நிறுத்தங்களிலும் நின்று மணிக்கு 220 முதல் 250 கி. மீ வேகத்தில் பயணிப்பதால் இதன் பயண நேரம் 3 மணிநேரம் ஆகிறது. மணிக்கு 3 சேவைகள் என ஒரு நாளைக்கு 35 முழு சுற்று சேவைகளாக தோராயமாக திட்டமிடப்பட்டுள்ளது
திட்ட பட்ஜெட்:-
மொத்த திட்ட மதிப்பு 17 billion அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாயில் 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி ஆகும். இதில் ஜப்பான் 14 billion அமெரிக்க டாலர் அதாவது இந்திய ரூபாயில் 88,000 ஆயிரம் கோடியும், இந்தியா மீதமுள்ள 23, 000 ஆயிரம் கோடியும் முதலீடு செய்யவேண்டும் என்பது செய்துகொண்ட உடன்படிக்கை. ஜப்பான் கொடுக்கும் பணத்தை 15 ஆண்டுகள் முடிவில் இருந்து 0.8% விட்டிவிகிதம் என்கிற அடிப்படையில் அடுத்த 50 ஆண்டுகள் வரை திரும்ப செலுத்தவேண்டும். அதாவது முதல் 15 ஆண்டுகளுக்கு வட்டியில்லா கடன் அதன்பிறகு 50 ஆண்டுகளுக்கு மேற்சொன்ன வட்டி விகிதத்தில் செலுத்தப்படவேண்டும் என்று பொருள். அப்படி என்றால் சிந்திக்கவே வேண்டாம் இது ஒரு கவர்ச்சிகர திட்டம் என்பது போல் தோன்றினாலும் இது ஒரு நாசகார திட்டமே.
உலகிலேயே இரண்டு பெரிய பேராசைக்கார திருடர்கள் உண்டு எனில் அது ஜப்பான் மற்றும் சீனாக்காரர்கள்தான். எவராவது தம்முடைய நாட்டில் உள்ள கணிசமான பொருளாதாரத்தை கொண்டுவந்து அடுத்த நாட்டை வளப்படுத்த நினைப்பாராகளா? அல்லது அப்படி இந்த பூமியில் சாத்தியமா என்றால் இல்லை இல்லவே இல்லை என்க. 196 நாடுகளைக்கொண்ட இந்த உலகில் ஆஸ்திரியா பெல்ஜியம் சீனா பிரான்ஸ் ஜெர்மனி இத்தாலி ஜப்பான் போலந்து போர்ச்சுக்கல் ரஷ்யா தென்கொரியா ஸ்பெயின் சுவீடன் தைவான் துருக்கி ஐக்கிய ராஜ்யம் ஐக்கிய நாடுகள் மற்றும் உஸ்பேக்கிஸ்தான் என இருபதுக்கும் குறைவான நாடுகளே இந்த அதிவேக ரயில் அமைப்பு முறையை பயன்படுத்துகின்றன. அதாவது உலக நாடுகளில் வெறும் 10% விழுக்காட்டிற்கும் கீழ் இந்த முறை பயன்படுத்தப்டுகிறதென்றால் நாம் சிந்திக்க வேண்டுமா வேண்டாமா?
நவீன கொள்ளையும் விளக்கமும்:-
நாம் ஏன் ஜப்பானிடம் வாங்க வேண்டும் அல்லது ஜப்பான் ஏன் இவ்வளவு வலிய வந்து தன்னுடைய பொருளாதாரத்தை முன்பே கொடுத்து ஏறத்தாழ நட்டத்திற்கு ஒரு திட்டத்தை விற்கவேண்டும்? கரணம் ஜப்பானின் துறை சார்ந்த அவர்கள் சொல்லும் அவர்களுடைய தொழில்நுட்பம். இந்த திட்டத்தை செயல்படுத்த நம்முடைய பங்காக 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிற்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பான 23, 000 கோடியை (230 billion INR) ஜப்பானுக்கு செலுத்திவிடவேண்டும். ஜப்பான் மீதமுள்ள தொகையான 88, 000 கோடி ரூபாயை பின்வருமாறு சரிசெய்துவிடும் என்க.
1. தொழிநுட்ப பரிமாற்றம் (Technology Transfer)
2. வடிவமைப்பு (Design)
3. திட்ட பொறியியல் (Project Engineering)
4. திட்ட மேலாண்மை (Project Management)
5. இயந்திரங்கள் வழங்கல் (Equipment supply)
6. நிறுவுதல் (Installation)
7. செயலாக்கம் (Commissioning)
8. புலப்பயிற்சி (Field Training)
9. செயல்திறன் ஏற்பு சான்றிதழ் (Performance Acceptance Certificate)
10.ஒப்படைத்தல் (Handing Over)
மேற்சொன்ன முதல் நான்கு நடவடிக்கைகளில் மட்டுமே மொத்த திட்ட மதிப்பில் 40% விழுக்காடு பணம் அதாவது 44, 400 கோடி சரிசெய்யப்படும். அதாவது இது வெறும் மூளை தொடர்பான காகித வேலை மட்டுமே என்க. வரிசை எண் 5ல் உள்ள இயந்திரங்கள் வழங்க 40% விழுக்காடு என்க. மீதமுள்ள வரிசை எண் 6 முதல் 10 வரை உள்ள மூளை சாந்த நடவடிக்கைகளுக்கு 20% விழுக்காடு அதாவது 22, 200 கோடி ருபாய் என்று பொருள்.
இப்பொழுது உண்மையிலேயே ஜப்பான் செலவழிப்பது எவ்வளவு?
வெறும் 44, 400 கோடி ருபாய் மட்டுமே. இதில் இந்தியா கொடுக்கும் தொகையை கழித்துவிட்டால்.....ஜப்பான் உண்மையிலேயே இந்த திட்டத்திற்காக செய்யும் செலவு என்பது 21, 400 கோடி ருபாய் மட்டுமே; (44,400 - 23, 000 = 21,400) ஆக, ஜப்பானை பொறுத்தவரை அவர்களுக்கு பெருத்த பகல் கொள்ளையே....!
இனி ஆட்சியாளர்களை நோக்கிய நமது கேள்விகள்......
ஓரேயொரு அகமதாபாத் மும்பை இனைப்பிற்கே அதாவது வெறும் 508 கிலோமீட்டர் இனைப்பிற்கே 1 லட்சத்து 11 ஆயிரம் கோடி மதிப்பீடு ஆகிறதே; நீங்கள் “வைர நாற்காலி திட்டம்’’ என்று நான்கு பெருநகரங்களையும்(டெல்லி மும்பை கொல்கத்தா மற்றும் சென்னை) இணைக்கும் 6000 கிலோமீட்டர் அதிவேக ரயில் திட்டத்தை ஒப்புக்கொண்டுள்ளீர்களே, இதற்கு 12 லட்சம் கோடி ருபாய் பணம் அதாவது இந்திய பொருளாதாரத்தில் ஏறத்தாழ பாதியளவு என்பதை ஏன் மறந்துபோனீர்கள்?
நமது நாட்டில் 1,20,000 கிலோமீட்டர் பதையுள்ள நடப்பு ரயில்வே, பாதுகாப்பற்ற சூழலிலும் அதிக விபத்துக்களிலும் நட்டத்திலும் இயங்குகிறதே; அதை சரி செய்யவும் இருவழி இருப்புப்பாதை அமைக்கவும் 11 லட்சம் கோடி பணம் தேவைப்படுகிறதே, நிலைமை இப்படி இருக்க இந்த நாட்டின் 125 கோடி சாமானியனுக்கு பயன்படாத இந்த சூப்பர் திட்டம் யாருக்காக?
நீங்கள் சொல்லும் இந்த சூப்பர் திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டரை கோடி பேர் பயணம் செய்தாலும் இந்த திட்டத்தினால் இந்திய பொருளாதாரம் வீழ்வது உறுதி என்று தெரிந்திருந்தும் சரியான இடர் பகுப்பாய்வு செய்ய மறந்து ஏன்?
2018 ல் தொடங்கி 2023ல் முடிவடையும் இந்த திட்டத்தில் பயன்பெறப்போகிறவர்கள், ஜப்பான், சீனா, பிரான்ஸ் அமெரிக்கா மற்றும் இங்குள்ள லார்சன் டூப்ரோ இன்னபிற அவ்வளவும் பன்னாட்டு உள்நாட்டு பெருநிறுவனங்கள் என்கிற நிலையில்; நம்முடைய சக சாமானியனுக்கு இதனால் ஒரு பயனும் இருக்கப்போவதில்லை என்பதை ஏன் மறைமுக வேலைவாய்ப்பு அது இது என்று மறைக்கிறீர்கள்?
இந்த திட்டம் தற்போது 1லட்சத்து 11 ஆயிரம் கோடியில் தொடங்கினாலும் முடியும்பொழுது 1லட்சத்து 50 ஆயிரம் கோடி ஆகும் என்பதை ஏன் வெளியில் சொல்ல மறைக்கிறீர்கள்? அப்படியெனில் ஒட்டுமொத்த இந்திய துணைக்கண்டத்தின் பொருளாதாரமும்(12 x 1,50,000 = 18,00,000) அதாவது மொத்த 6000 கிலோமீட்டர் இணைப்பிற்குமாக 18 லட்சம் கோடி, இந்த இத்துப்போன திட்டத்தில் அழியப்போவது உறுதி என்பதை ஏன் மறைக்கீர்கள்?
ஜப்பான் தன்னுடைய இழந்துவரும் பொருளாதாரத்தை நிலைநிறுத்த எடுக்கப்பட்டிருக்கும் ஏனைய நடவடிக்கைகளில் ஒன்றுதான் இதுவென்று எல்லா நாடுகளும் அறிந்ததே. எனவேதான் உலகில் பெரும்பாலான நாடுகள் இந்த சூப்பர் கவர்ச்சிகர திட்டத்தை ஏற்க மறுத்து ஜப்பானின் தந்திர வலையில் விழாமல் தங்களின் பொருளாதாரத்தை தற்காத்துக்கொண்டன. அதுமட்டுமல்ல இதுவரை இந்த திட்டத்தை அனுமதித்து செயல்படுத்திய நாடுகளின் பொருளாதார அனுபவம் மிகவும் கசப்பானதே என்று ஆராயாமல், இந்த நாசகார திட்டத்தை கையில் எடுத்தேன்?
இந்தியத்துணைக்கண்டத்தில் ஓரளவு செழிப்பாக இருப்பதே விரல் விட்டு எண்ணக்கூடிய மாநிலங்கள்தான் என்கிற நிலையில்; அதையும் சுரண்டி பெருநிறுவனங்களிடம் கொடுப்பதுதான் உங்களின் சூப்பர் பொருளாதார புரட்சியா?
அரபிக்கடலில் சுரங்கப்பாதை அமைத்து அதிவேக ரயில் விடுகிற அளவிற்கு இந்திய துணைக்கண்டம் பொருளாதாரத்தில் வலிமை பெற்றுள்ளதா?
சீனா அமெரிக்க ஐரோப்பிய நாடுகளின் அதிக அளவு வருவாய் ஈட்டும் நாடுகள் எனவே அவைகளுக்கு அது பெரிய இழப்பாக இருக்காது. ஆனால் நமைப்பொன்று பொருளாதார உறுதியற்ற குறைந்த வருவாய் ஈட்டும் நாட்டில் அதுவும் தனி நபர் வருவாய் சொற்பமே என்கிற நிலையில்; இப்படிப்பட்ட திட்டம் தேவைதானா?
இந்த திட்டத்தை செயல்படுத்த இங்குள்ள பாரத் ஹெவி எலெக்ட்ரிகல்ஸ் (BHEL) உடன் இணைத்து அதிவேக ரயிலுக்கான rolling stock மட்டும் செய்யும்படி ஒப்பந்தம் போட்டீர்களே, புதிது புதிதாக ராக்கெட் செய்யத்தெரிந்த உங்களுக்கு மீதமுள்ள ரயில் வேலைகள் தெரியவில்லையா? அல்லது ஜப்பானுக்கு பொறியாளர்களை அனுப்பி பயிற்சி பெற்று நீங்களே உருவாக்கலாமே?
இறுதியாக யார் சொல்லிக்கொடுத்து இப்படியெல்லாம் செய்கிறீர்கள்? உங்களின் 5 ஆண்டு நோக்கம்தான் என்ன?
சாமானியனுக்காக ஒன்று கூட நல்லதாகவே சிந்திக்கவே மாடீர்களா ?
இன்னமும் சொல்வேன்.....
பார்த்திபன் ப
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக